'108' ஆம்புலன்சில் வேலைவாய்ப்பு: சென்னையில் 22ம் தேதி நேர்காணல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 18, 2014

'108' ஆம்புலன்சில் வேலைவாய்ப்பு: சென்னையில் 22ம் தேதி நேர்காணல்

அவசரகால, '108' ஆம்புலன்ஸ் சேவையில் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம், சென்னையில் 22ம் தேதி நடக்கிறது.

தமிழக அரசும், ஜி.வி.கே., நிறுவனமும் இணைந்து, '108' அவசர கால ஆம்புலன்ஸ் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இதில், மருத்துவ உதவியாளர், ஆம்புலன்ஸ் டிரைவர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம், 22ம் தேதி, சென்னை, கோயம்பேட்டில் உள்ள, புனித தாமஸ் கலை அறிவியல் கல்லூரியில் நடக்கிறது.

இதுகுறித்து, '108' சேவை மையத்தின் விழிப்புணர்வு மேலாளர், பிரபுதாஸ் கூறியதாவது: வேலைவாய்ப்பு முகாம், காலை, 10:00 மணி முதல், பிற்பகல், 3:00 மணி வரை நடக்கும். பி.எஸ்சி., அறிவியல் சார்ந்த பட்டம்; பி.எஸ்சி., நர்சிங், அரசு கல்லூரியில், ஓராண்டு மருத்துவம் சார் டிப்ளமா முடித்த, 19 முதல், 30 வயதுக்குள் உள்ளோர் மருத்துவ உதவியாளர் பணிக்கு பங்கேற்கலாம். பத்தாம் வகுப்பு தேறிய, தவறிய மூன்றாண்டு முன் அனுபவம் உள்ள, 25 முதல், 35 வயதுக்கு உள்ளோர், ஆம்புலன்ஸ் டிரைவராக சேரலாம். மருத்துவ உதவியாளர்களுக்கு, 10,536 ரூபாய், டிரைவர்களுக்கு, 10,091 ரூபாய் சம்பளம் தரப்படும்; மாவட்டம், கல்வித் தகுதிக்கு ஏற்ப மாறுபடும். முகாமிற்கு, உரிய சான்றுகளை கொண்டு வர வேண்டும். தேர்வு பெறுவோர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பணி அமர்த்தப்படுவர். மேலும், விவரங்களுக்கு, 044 - 28888060 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி