தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் தலைமை ஆசிரியர் நியமிக்க பொதுக்குழுவில் கோரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 18, 2014

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் தலைமை ஆசிரியர் நியமிக்க பொதுக்குழுவில் கோரிக்கை.


தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம், தஞ்சைஅரசர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட தலைவர் ரங்கராசு தலைமை வகித்தார். மாநில செயலாளர் ஆசைத்தம்பி, பொது செயலாளர் முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களும், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் பதவி உயர்வின் மூலமே நிரப்ப வேண்டும்.மேலும், 2004-06 தொகுப்பூதிய காலத்தை பணி காலமாக கருதி, தேர்வுநிலை பணப்பலன்களை வழங்க வேண்டும். மேல் படிப்புக்கு முன், அனுமதி அந்தந்த பள்ளி தலைமையாசிரியரே வழங்க அனுமதி அளிக்க வேண்டும்.

வகுப்பறையில், ஆசிரியர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலையில், 100 சதவீதம் தேர்ச்சி வேண்டுவதை முதன்மை கல்வி அலுவலர் நிறுத்தி கொள்ள வேண்டும். தரம் உயர்த்தப்பட்ட, 50 உயர்நிலைப்பள்ளிகளுக்கு, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாறுதல் கவுன்சில் நடத்த வேண்டும். தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளிகளுக்கு, தலைமை ஆசிரியர்களை உடனே நியமிக்க வேண்டும்.எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வு நேரத்தை காலை, 10 மணிக்கு துவங்க வேண்டும். விடைத்தாள் திருத்த நாள் ஒன்றுக்கு, 15ரூபாய் வழங்க வேண்டும், என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி