மார்ச் முதல் வாரத்தில் அடுத்த செயற்கைக்கோள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 19, 2014

மார்ச் முதல் வாரத்தில் அடுத்த செயற்கைக்கோள்

வரும் 2015 மார்ச் மாதத்தில் இந்தியப் பிராந்திய வழிகாட்டி அமைப்புக்கான (ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.) 4-ஆவது செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது.

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1டி என்ற இந்தச் செயற்கைக்கோளை ஏவியதும் இந்த வழிகாட்டி அமைப்பு செயல்பாட்டுக்கு வர உள்ளது.

இதுதொடர்பாக இஸ்ரோவின் விண்வெளித் திட்டங்கள் மைய இயக்குநர் கிரண் குமார் கூறியது:

இந்தியப் பிராந்திய வழிகாட்டி அமைப்புக்காக ஏற்கெனவே மூன்று செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன. இப்போது சிக்னல்களை பெறும் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த மூன்று செயற்கைக்கோள்களும் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து 5 ஆயிரம் கிலோ மீட்டர் வரை சிக்னல்களை அனுப்புகின்றன. நான்காவது செயற்கைக்கோள் ஏவப்பட்டதும் இந்த அமைப்பு செயல்பாட்டுக்கு வரும்.

அடுத்த ஆண்டு மத்தியில் இந்த வழிகாட்டி அமைப்பு முதல் கட்டமாகச் செயல்படத் தொடங்கும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் மீதமுள்ள ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்படும் என்றார் அவர்.

இந்தியப் பிராந்திய வழிகாட்டி அமைப்புக்காக மொத்தம் 7 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி