'மின் துறையில் காலிப்பணியிடம்: விரைவில் நிரப்ப நடவடிக்கை' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 30, 2014

'மின் துறையில் காலிப்பணியிடம்: விரைவில் நிரப்ப நடவடிக்கை'

பெங்களூரு: "மின்துறையில், காலியாக உள்ள பணியிடங்கள், விரைவில் நிரப்பப்படும்,” என, மின்துறை அமைச்சர் சிவகுமார் கூறினார்.

பெங்களூருவில், கர்நாடக மின்வாரிய இன்ஜினியர்கள் சங்கத்தின், 2015ம் ஆண்டு காலண்டரை வெளியிட்டு, அமைச்சர் சிவகுமார் பேசியதாவது: மின்துறையில் காலியாகவுள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். 10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு, லைன்மேன் பணியிடம் வழங்கப்படும். மாநிலத்தில், 9,500 லைன்மேன் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவது தொடர்பாக முதல்வருடன் விவாதிக்கப்பட்டுள்ளது. லைன்மேன் பணியிடங்களை நிரப்பினால், மின்துறை வலுவாகும். இப்பணியிடங்கள் மட்டுமின்றி, துறையில் காலியாகவுள்ள, அனைத்து பணியிடங்களும் நிரப்பப்படும். மின்சாரத்தை தவறாக பயன்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மின்கசிவை கட்டுப்படுத்த, இன்ஜினியர்கள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

2 comments:

  1. அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் எனது நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை முன்னதாகவே தெரிவித்து கொள்கிறேன்

    Advance happy new year

    வரப்போகும் இந்த 2015 உங்கள் வாழ்வில் இனிய வசந்தத்தை ஏற்படுத்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. What about computer instructor appointment in TN govt school?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி