TNPSC:உயர் நீதிமன்றங்களில் காலிப் பணியிடங்களுக்கு நேர்காணல்- சான்றிதழ் சரிபார்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 17, 2014

TNPSC:உயர் நீதிமன்றங்களில் காலிப் பணியிடங்களுக்கு நேர்காணல்- சான்றிதழ் சரிபார்ப்பு


உயர் நீதிமன்றங்களில் காலியாகவுள்ள நேர்முக உதவியாளர், கணினி இயக்குபவர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்காணலும், சான்றிதழ் சரிபார்ப்பும் அடுத்த மாதம் நடைபெறுகின்றன.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
உயர் நீதிமன்றத்தில் நீதிபதிக்கான நேர்முக உதவியாளர், உதவியாளர், கணினி இயக்குபவர், தட்டச்சர் ஆகிய பிரிவுகளில் 268 காலியிடங்கள் உள்ளன. இந்தக் காலியிடங்களை நிரப்புவதற்கு கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வினை 27 ஆயிரத்து 983 பேர் எழுதினர்.எழுத்துத் தேர்வைத் தொடர்ந்து நடத்தப்பட்ட திறனறிவுத் தேர்வில் 3 ஆயிரத்து 631 பேர் பங்கேற்றனர். அதிலிருந்து நேர்முகத் தேர்வுக்கு 221 பேர் அனுமதிக்கப்பட்டனர். இந்தப் பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ர்ஸ்.ண்ய்) வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புஜனவரி 5-ஆம் தேதியும், நேர்காணல் தேர்வு ஜனவரி 6 முதல் 8-ஆம் தேதி வரை நடைபெறும். இது, நேர்முக உதவியாளர் உள்ளிட்ட 4 பணியிடங்களுக்கு மட்டும் பொருந்தும்.

தட்டச்சர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தனியாக வெளியிடப்படும் என்று தேர்வாணையம்தெரிவித்துள்ளது.

2 comments:

  1. LP (Civil) 29245/2014

    STATUS PENDING
    Cause Title
    V. LAVANYA & ORS.
    Vs.
    THE STATE OF TAMIL NADU & ORS.
    Advocate Details
    Pet. Adv. MR. T. HARISH KUMAR
    Res. Adv. Not Available
    High Court Details
    Appealed Against Case No WA 1031/14
    High Court Name HIGH COURT OF MADRAS

    Subject Category
    SERVICE MATTERS - RECRUITMENT/TRANSFER/COMPASSIONATE APPOINTMENT

    Listing Details
    Next Date of Listing 16/01/2015

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி