வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 15, 2015

வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!


புதுடெல்லி:வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டியை 0.25 சதவிகிதம் குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
சர்வதேச பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள சரிவு, கச்சா எண்ணெய் விலை சரிவு ஆகியவற்றின் காரணமாக வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டியை (ரெப்போ) 0.25 சதவிகிதம் குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இருப்பினும், வங்கிகளின் கையிருப்பு தொகையில் எந்த மாற்றமும் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரிசர்வ் வங்கியின் இந்த வட்டி குறைப்புக் காரணமாக, வங்கிகளில் வாங்கப்படும் வீட்டு கடன் மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.அதேநேரத்தில், வட்டி குறைப்பு காரணமாக, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 46 பைசா உயர்ந்து 61.72 ரூபாயாக உள்ளது.இதேபோல், மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் மதிப்பு 600 புள்ளிகள் அதிகரித்து 27,947.59 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 176.05 புள்ளிகள் அதிகரித்து 8,453.60 புள்ளிகளாக உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி