கற்பித்தல் திறன் பதிவு ஆசிரியர்களுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 22, 2015

கற்பித்தல் திறன் பதிவு ஆசிரியர்களுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது


புதுமைøயான கற்பித்தல் திறன்களை, இணையதளத்தில் ஆசிரியர்கள் பதிவு செய்வதற்கான அவகாசம், வரும் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் அடிப்படை கற்றல் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், புதுமையான முறைகளை கையாள, அனைவருக்கும் கல்வி மற்றும் இடைநிலை கல்வி இயக்கம் மூலம், பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
இதை பின்பற்றி ஆசிரியர்கள் பாடம் நடத்துகின்றனர்; வேறுசிலர், தங்களது எண்ணப்படி வித்தியாசமான முறைகளை கையாண்டு, மாணவர்களின் திறனை மேம்படுத்துகின்றனர்.புதுமையான கற்பித்தல் வழிமுறைகளை, அனைத்து ஆசிரியர்களும் அறிந்து பயன் பெறும் வகையில், அந்த முறையை இணையதளத்தில் பதிவு செய்யும் வசதியை, மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் ஏற்படுத்தியுள்ளன.

அதன்படி, திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட ஆசிரியர்கள் இணையதளத்தில் பதிவு செய்வதற்கு, உடுமலை திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்பில்,tணண்ஞிஞுணூt.ணிணூஞ்/டிணணணிதிச்tடிணிண என்ற இணையதள இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.புதுமையான கற்பித்தல் திறன்கள் குறித்து, இந்த இணையதளத்தில் பதிவு செய்ய, கடந்த 15ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இது, தற்போது, 25ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விவரங்களுக்கு,99767-08768 என்ற எண்ணை, ஆசிரியர்கள் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி