SCERTல் 400 பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 17, 2015

SCERTல் 400 பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி


தலைமை ஆசிரியர்தான் ஒரு பள்ளியின் முன்மாதிரியாக திகழவேண்டும். அப்படி விளங்கினால்தான் சக ஆசிரியர்கள் முன்மாதிரியாக வருவார்கள். ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றினால்தான் மாணவர்கள் சிறப்பாக படிப்பார்கள், ஒழுக்கமாக நடப்பார்கள் என்பதை பள்ளி கல்வித்துறை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவருக்கும் பயிற்சி அளிக்க முடிவு செய்தது.

அதன்படி சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (ஆசிரியர் பயிற்சி கல்வி இயக்குனரகம்) சார்பில் பயிற்சி தொடங்கியது. பயிற்சி 5 கட்டமாக நடக்கிறது. நேற்று மட்டும் 80 பேர் கலந்துகொண்டனர். மொத்தம் 400 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பயிற்சி பெறுகிறார்கள்.இந்த பயிற்சி 4 நாட்கள் நடைபெறுகிறது.

தலைமை ஆசிரியர்கள் நேரம் தவறாமல் சரியாக பள்ளிக்கூடத்திற்கு செல்லவண்டும், அவர்களுக்கு உரிய பல்வேறு பதிவேடுகளை அவர்கள் முறைப்படி, சரியாக பராமரிக்க வேண்டும், கல்வி, விளையாட்டு, யோகா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாணவர்களை சிறந்தவர்களாக விளங்க வைக்கவேண்டும், பள்ளிகளில் எந்த காரணத்தை கொண்டும் ஒழுங்கீன செயல்கள் நடக்கக்கூடாது, நல்ல நோக்கம் ஆகிய பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

நேற்று நடிகர் தாமு உள்ளிட்ட பல நிபுணர்கள் வந்து ஆசிரியர்களுக்கு நல்ல நோக்கம் உள்பட பலதலைப்புகளில் பயிற்சி அளித்தனர்.பயிற்சிக்கான ஏற்பாடுகளை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் செய்திருந்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி