கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 28, 2015

கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு


செந்துறை தாலுகாவில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து, செந்துறை வட்டாட்சியர் ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகாவில் உள்ள ஆதனங்குறிச்சி,மணக்குடையான்,பெரியாக்குறிச்சி ஆகிய வருவாய் கிராமங்கலில் கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.இவற்றிற்கு புதிய பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.ஆதனங்குறிச்சி கிராமத்துக்கு அருகில் வசிக்கும் தளவாய், மணக்குடையான், ஆலத்தியூர், துளார், ஆதனங்குறிச்சி ஆகிய கிராமங்களில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், விதவைகள் விண்ணப்பிக்கலாம்.மணக்குடையான் கிராமத்துக்கு ஆதனங்குறிச்சி, துளார்,தளவாய், அசாவீரன்குடிக்காடு, மற்றும் மணக்குடையான் கிராமங்களைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் விண்ணப்பிக்கலாம். பெரியாக்குறிச்சி கிராமத்துக்கு மணப்புத்தூர், அசாவீரன்குடிக்காடு, சிறுகளத்தூர், மருவத்தூர், நக்கம்பாடி மற்றும் பெரியாக்குறிச்சியை சேர்ந்த பொது வகுப்பினரும், அட்டவணை வகுப்பினரும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்குள்பட்டவராகவும் இருக்க வேண்டும். அட்டவணை வகுப்பினர் 35 வயதுக்குள்பட்டவராகவும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 32 வயதுக்குள்பட்டவராகவுமம் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் தங்கள் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் பெயர் முகவரி, கல்வித்தகுதி, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் போன்ற முழு விபரங்களுடன் ரூ.30 க்கான அஞ்சல் தலை ஒட்டப்பட்ட உறையுடன் செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் ஏப்.6 ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி