கல்வித்துறை புது உத்தரவு தேர்வில் மாணவர்கள் பிட் அடித்தால் மேற்பார்வையாளர் மீது நடவடிக்கை ஆசிரியர்கள் அதிருப்தி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 23, 2015

கல்வித்துறை புது உத்தரவு தேர்வில் மாணவர்கள் பிட் அடித்தால் மேற்பார்வையாளர் மீது நடவடிக்கை ஆசிரியர்கள் அதிருப்தி


பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பிட் அடித்தால், அந்த அறையின் மேற்பார்வையாளரான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது, ஆசிரியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து வருகிறது.இதில், முறைகேடு நடக்காத வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி,தேர்வு அறையில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு நாற்காலிகள் போடக்கூடாது என்பது உள்ளிட்ட சில உத்தரவுகள் தேர்வின் துவக்கத்திலேயே அறிவிக்கப்பட்டன. இந்நிலையில்,தற்போது ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அலுவலர்கள் அனுப்பிய சுற்றறிக்கையில், தேர்வு அறையில் பிட் வைத்திருந்து மாணவன் பிடிபட்டால், சம்பந்தப்பட்ட மேற்பார்வையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது, ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், ‘தேர்வு அறையில் மாணவர்களை ஒரு அளவுக்கு மேல் சோதிக்க முடியாது. மாணவிகளை ஆசிரியர்கள் சோதிக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவர்கள் பிட் கொண்டு வருவதற்கு மேற்பார்வையாளர் எந்த வகையில் பொறுப்பாக முடியும். தேர்வு அறையில் மாணவர்கள் பிட் அடிப்பதை தவிர்க்க கண்காணிப்பை தீவிரப்படுத்த அதிகாரிகள் உத்தரவிடலாம். பறக்கும் படையினரை கூடுதலாக நியமித்து, தீவிர சோதனை நடத்தி, பிட் கொண்டு வரும் மாணவர்களை பிடித்து நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், இதை விட்டுவிட்டு, மேற்பார்வையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என கல்வித்துறை அதிகாரிகளின் இதுபோன்ற மிரட்டல் உத்தரவுகளால், ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே, இந்த உத்தரவை கல்வித்துறை திரும்ப பெற வேண்டும்,’ என்றனர்.

17 comments:

  1. Replies
    1. Indru namathu aadidravida/ Kallar ina aasiriyargalin porattam indru inithe niraivadainthathu naalaiyum thodarum anaivvarum thavaramal kalanthu kolla vendum ena kettukolkirom

      Delete
  2. இவர்கள் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவார்கள்....

    ReplyDelete
  3. அறிவை வளர்க்க கூடிய கல்வித்துறையே முட்டாள்தனமான அறிக்கைவிடுவது நமக்கு இது ஒரு சான்று.
    முட்டாள் தனத்தை 4 வருடங்களாக அரங்கேற்றி வருகின்றனர்

    ReplyDelete
  4. they are encouraging students to copy more .let them say if the superviser catches a student with malpractice he will be given with some gifts .That they will not do . ONE CLASS ROOM FOR 20 STUDENTS THE CLASS ROOM FOR THE SAME NUMBER OF STUDENTS USED AS EXAM CALL .WHY CAN'T THE GOVERNMENT BRING THE SCANNER BEFORE THE EXAM HALL .............. IF I SAY THIS. ..EVERYONE ONE WILL LAUGH AT ME

    ReplyDelete
  5. காப்பி அடிப்பதை தடுக்க ஒரே வழி.தேர்வை ரத்து செய்ய வேண்டும்..க க க போ

    ReplyDelete
  6. Next PG exam notification October 2015 or September 2015.More than 2000 vacancies.

    ReplyDelete
    Replies
    1. Pg English ku Enna book padikalam.Pls help me with your reply

      Delete
  7. Replies
    1. I am so good by god's grace and well-wishers like you. How are you?

      Delete
  8. இந்த புத்தகத்தின் சிறப்பு என்னவென்றால் இது முற்றிலும் சோதனை புத்தகம். இது முழுக்க முழுக்க சமச்சீர் புத்தகத்தின் மூலை முடுக்குகளில் இருந்து கேள்வி பதில்கள் தொகுக்கப்பட்டுள்ளன.முதலில் நீங்கள் சமச்சீர் புத்தகத்தை நன்றாக படியுங்கள் பின்னர் எனது புத்தகத்தின் கேள்விகளுக்கு பதில் சொல்லி பாருங்கள். பதில் தெரியவில்லையா நாம் நன்றாக படிக்கவில்லை என்று அர்த்தம். அதனால் மீண்டும் சமச்சீர் புத்தகத்தை நன்றாக படித்து பின்னர் எனது புத்தகத்தின் கேள்விக்கு பதில் சொல்லி பழகவும். நேரமின்மை என்று காரணம் காட்டி எனது புத்தகத்தை மட்டும் படிக்கும் நபர்கள் மறதிக்கு உட்படுவார்கள். இந்த புத்தகத்தின் எந்த ஒரு பக்கத்திலும் உள்ள கேள்விக்கு உடனே பதில் வருகிறது என்றால் நீங்கள் தயாரான விதம் சரி. பதில் வரவில்லை என்றால் நீங்கள் இன்னும் தயாராக வேண்டும். முக்கியமாக எந்த நிலையிலும் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள விடைகளை பார்த்து படிக்க வேண்டாம். நீங்கள் சொல்லும் பதில் சரியா என்று பார்ப்பதற்கு வேண்டுமானால் விடைகளை பாருங்கள்.
    சமச்சீர் புத்தகத்தை நன்றாக படித்துஎனதுபுத்தகத்தைபயன்படுத்துங்கள்
    வெற்றி உறுதி

    BALASUBRAMANI VEL-9976715765

    ReplyDelete
  9. ஆசிரியர்கள் தங்கள் கையைக் கட்டிக்கொண்டு, போரில் வெற்றி பெறவேண்டும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கிறார்கள் போலும். யார் தவறு செய்தாலும் ஆசிரியர்களே பொருப்பு என்பது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.

    ReplyDelete
  10. ethu rompa over manavargalin thappukku aciriyar eppadi poruppaka mudiyum??..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி