தமிழகம் முழுவதும் அரசு வேலைகளுக்காக 85 லட்சம் பேர் காத்திருப்பு வேலைவாய்ப்பு பயிற்சித்துறை தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 25, 2015

தமிழகம் முழுவதும் அரசு வேலைகளுக்காக 85 லட்சம் பேர் காத்திருப்பு வேலைவாய்ப்பு பயிற்சித்துறை தகவல்

தமிழகம் முழுவதும் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் ஏறத்தாழ 85 லட்சம்பேர் பதிவு செய்துவிட்டு அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலகமும், சென்னை மற்றும் மதுரையில்மாநில தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகங்களும் உள்ளன.
சென்னை மாவட்டத்தில் கூடு தலாக தொழில்நுட்பப்பிரிவு, மாற்றுத் திறனாளிகள் உள்பட 3 சிறப்பு வேலைவாய்ப்பு அலு வலகங்கள் இயங்குகின்றன.

புதுப்பித்து வர வேண்டும் பட்டப் படிப்பு வரையிலான கல்வித்தகுதியை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலகத்திலும், முதுகலை மற்றும் பொறியியல், மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட தொழில்கல்வி படிப்புகளுக்கான கல்வித் தகுதியை அமைவிடத்துக்கு ஏற்ப சென்னையில் அல்லது மதுரையில் உள்ள மாநில வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவுதாரர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்கள் பதிவினை தவறாமல் புதுப்பித்து வர வேண்டும். அப் போது பதிவுமூப்பு (சீனியாரிட்டி) நடப்பில் இருக்கும். பெண்கள் அதிகம் இந்த நிலையில், 31.3.2015 வரையில் மாவட்ட, மாநில மற்றும் சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய் துள்ள பதிவுதாரர்களின் எண் ணிக்கை தொடர்பான புள்ளி விவரத்தை மாநில வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை நேற்று வெளியிட்டது.

அதன்படி, அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களையும் சேர்த்து பதிவுதாரர்களின் எண்ணிக்கை 84 லட்சத்து 97 ஆயிரத்து 402.இதில் பெண் பதிவுதாரர்கள் மட்டும் 43 லட்சத்து 24 ஆயிரத்து 881 ஆகும். இது ஆண்களைவிட அதிகம். இடைநிலை ஆசிரியர்கள் 81 ஆயிரத்து 777 பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் 3 லட்சத்து 91 ஆயிரத்து 816 பேரும், பொறியியல் பட்டதாரிகள் 2 லட்சம் பேரும் கலை பட்டதாரிகள் 4.26 லட்சம் பேரும், அறிவியல் பட்டதாரிகள் 5.69 லட்சம் பேரும், வணிகவியல் பட்டதாரிகள் 3.22 லட்சம் பேரும் பதிவுசெய்துள்ளதாக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி