1250 காலி பணியிடங்கள் :கூட்டுறவுத்துறையில் தொய்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 5, 2015

1250 காலி பணியிடங்கள் :கூட்டுறவுத்துறையில் தொய்வு

தமிழகத்தில் கூட்டுறவுத்துறையில் 1250காலிப் பணியிடங்கள் நிரப்படாததால், பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் 87 துணை பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. அனைத்து அலுவலங்களிலும் தலா 3 அதிகாரிகள் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


கிருஷ்ணகிரி, கோவை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கண்காணிப்பாளர் பணியிடம் காலியாக உள்ளன. கூட்டுறவுத்துறையை கம்ப்யூட்டர் மயமாக்க அரசு ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது.தற்போது 1,250 காலிப் பணியிடங்கள் உள்ளதால், கவனிக்க இயலாமல் ஊழியர்கள் திணறுகின்றனர். அரசு உத்தரவிட்ட கூட்டுறவுத்துறை கோப்புக்களை கம்ப்யூட்டர் மயமாக்கும் பணிகள் தொய்வடைந்துள்ளது. நகரங்களிலும் கூட்டுறவுத்துறை ஆய்வுக்கானபணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

கூட்டுறவுத்துறை ஊழியர்கள் சங்கத்தின் துணை தலைவர் ஜெயராஜ் கூறியதாவது: துணை பதிவாளர் அலுவலகங்களில் தினசரி கோப்புக்கள் அதிகளவில் சேகரமாகின்றன. இதனை கம்ப்யூட்டரில் பதிவேற்றும் பணிகள் தொடர்ந்து பல மாதங்களாக நடந்து வருகிறது. கம்ப்யூட்டர் பதிவேற்றம் செய்யக்கூடிய உதவி அலுவலர்கள், உதவியாளர்கள் பணியிடம்1250க்கும் மேல் நிரப்பப்படாமல் உள்ளது. தினசரி அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது, என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி