ஆசிரியர் டிப்ளமோ: முதல் நாளில் 173 பேர் சேர்ந்தனர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 2, 2015

ஆசிரியர் டிப்ளமோ: முதல் நாளில் 173 பேர் சேர்ந்தனர்

தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்குரிய டிப்ளமோ படிப்பில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான இணைய வழி கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது.முதல் நாளில், டிப்ளமோ படிப்பில் 173 மாணவ, மாணவியர் சேர்ந்தனர்.தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ படிப்புக்கு ஒற்றைச் சாளர முறையில் இணைய வழி கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மையங்களில் ஜூலை 4-ஆம் தேதி வரை இந்தக் கலந்தாய்வு நடைபெறும்.

அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலிருந்து இந்தக் கலந்தாய்வுக்காக 10 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆனால், இந்தக் கலந்தாய்வுக்கு மொத்தமாகவே 2,759 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.ஆங்கிலம், உருது, தெலுங்கு ஆகிய மொழிகளில் பயில விண்ணப்பித்திருந்தவர்கள், சிறப்புப் பிரிவினருக்கு முதல் நாளான புதன்கிழமை கலந்தாய்வு நடைபெற்றது. எனவே, இதில் குறைந்த அளவு மாணவர்களே சேர்ந்தனர். தமிழ் வழியில் படித்த தொழில்பிரிவு, கலைப்பிரிவு மாணவிகளுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை நடைபெறுகிறது.தமிழ் வழியில் படித்த மாணவிகளுக்கான கலந்தாய்வு நடைபெறும் போது, சேர்க்கை அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி