எந்தவொரு அரசுப் பள்ளியையும் மூடும் எண்ணம் கிடையாது: தமிழக பள்ளிக் கல்வித்துறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 21, 2015

எந்தவொரு அரசுப் பள்ளியையும் மூடும் எண்ணம் கிடையாது: தமிழக பள்ளிக் கல்வித்துறை

தமிழகத்தில், 1,200 தொடக்கப் பள்ளிகள் மூடப்படவிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி ஆதாரமற்றது என பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. சென்னையில் செய்தியாளருக்கு பேட்டி அளித்த பள்ளி கல்வித்துறை செயலர் சபிதா இதனை தெரிவித்தார்.


தமிழகத்தில் இயங்கி வரும் எந்தவொரு அரசுப் பள்ளியையும் மூடும் எண்ணம் கிடையாது என அவர் கூறினார். 1,200 தொடக்க பள்ளிகளை மூடப்போவதாக வெளியான செய்திகள் ஆதாரமற்றது என்றும் சபிதா மறுத்தார்.முன்னதாக ஆயிரத்து 200 தொடக்க பள்ளிகள் மூடப்பட இருப்பதாக ஆசிரியர் அமைப்புகள் தெரிவித்திருந்த தகவலை பாமக நிறுவனர் ராமதாஸ் சுட்டிக்காட்டி இருந்தார்.

மேலும் பள்ளிகளை மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்றும் அவர் அறிக்கை மூலம் கேட்டுக்கொண்டிருந்தார்.

2 comments:

  1. பள்ளிக்கூடங்களை திறந்து வைத்து என்ன பயன் ???
    போதுமான ஆசிரியர்களை நியமிக்காமல் ...

    2016 தேர்தல் வந்தே தீரும்

    ReplyDelete
  2. Ayya vantha only seniority thaan sir theriumla

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி