முதுநிலை ஆசிரியர்களுக்கு பணிவரன் முறை வழங்க தாமதம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 6, 2015

முதுநிலை ஆசிரியர்களுக்கு பணிவரன் முறை வழங்க தாமதம்

பணி நியமனம் செய்யப்பட்ட முதுநிலை ஆசிரியர்களுக்கு, பணிவரன் முறை வழங்காத மேல்நிலைக் கல்வித்துறை இணை இயக்குநரைக் கண்டித்து, வரும் 17-ஆம் தேதி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலர் ஆ.ராமு வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையில், வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், 2010 முதல் 2015 மார்ச் வரை ஆயிரக்கணக்கான முதுநிலை ஆசிரியர்கள் நேரடி நியமனம்செய்யப்பட்டு, ஆசிரியர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.இவர்களுக்கு, பணி நியமன ஆணை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

பணி வரன்முறை ஆணை இதுவரை வழங்கப்படவில்லை. இதனால், பணி நியமனம் செய்யப்பட்ட, ஆயிரக்கணக்கான முதுநிலை ஆசிரியர்கள், அரசு ஊழியருக்கான எந்த அடிப்படை உரிமைகளையும் பெற முடியாமல், மன உளைச்சலுடன் பணியாற்றி வருகின்றனர். பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) அனுப்பி உள்ள ஒரு சில பணிவரன் முறை ஆணைகளிலும், தேதி மற்றும் ஆண்டில் குளறுபடி காணப்படுகிறது.

கடந்த 2010 முதல் 2015 வரை நியமிக்கப்பட்ட முதுநிலை ஆசிரியர்களுக்கு முறையான பணிவரன் முறை ஆணை வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறைக்கு பலமுறை, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், பணிவரன் முறை ஆணை பற்றி கண்டு கொள்ளாமல் அலட்சியமாக இருந்து வருவதால், மேல்நிலைக் கல்வி இணை இயக்குநரைக் கண்டித்து, ஜூலை 17-ஆம் தேதி நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய பட்டதாரி ஆசிரியர் கழகம் முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி