காலமும் காலனும் செய்த பிழை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 29, 2015

காலமும் காலனும் செய்த பிழை!

காலமும் காலனும் செய்த பிழையின் காரணமாக  கலாம் எனும் பாரதத் தேசத்தின், பார் போற்றும், முதல் குடிமகனாய் இருந்திருந்தாலும் ஒரு எளிய குடிமகனாகவே தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தமிழன்னையின் தன்னிகரற்ற தலைமகன் காற்றில் கரைந்துள்ளார்.

கலாம் செய்த சாதனைகள் என்ன?

இஸ்ரோவில் 30 ஆண்டுகள் விஞ்ஞானி, உலகத்தின் செயற்கைக்கோள்கள் யாவும் உலகை அணுவணுவாய் படம் பிடித்துக் கொண்டிருந்த பொழுதும், அவை யாவும் ஓய்ந்த ஒரு கணத்தில் பொக்ரான் அணுகுண்டை வெடித்து உலகமே இந்தியாவை வெறிக்கப் பார்த்த செய்த சாதனையைக் காட்டிலும் இந்த தேசத்தை உண்மையான வளர்ச்சியை நோக்கி நகர்த்தும் சக்தி மாணவர்களிடமும்,இளைஞர்களிடமும்தான் இருக்கிறது என்ற உண்மையை உணர்ந்து இந்த தேசத்தின் பாதி இளைஞர்களை சந்தித்து "கனவு காணுங்கள், அதை நனவாக்குங்கள்" என்ற மந்திரத்தை சொல்லிக் கொடுத்ததில்தான் . அவர் ஓங்கி ஒளிர்கிறார்



உலக அரங்கில் இந்தியாவின் கையை ஓங்கச் செய்தது மட்டுமல்ல, யூதர்களும் தமிழர்களுமே பரிணாம வளர்ச்சியில் உச்சம் பெற்று உயர் சிந்தனையாற்றல் கொண்டவர்கள் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் 130 கோடி மக்கள் கொண்ட இந்திய தேசத்தில் தமிழனின் தரத்தை பறைசாற்றிய பச்சைத் தமிழன்.

நான் தமிழினத்தின் தலைவர் என்று சொல்லிக்கொள்பவர்கள் கூட,புராணம் என்றால் புரட்டு,புரட்டு என்றால் பொய். ஆகவே தமிழிலக்கியங்கள் யாவும் பொய்யானவை,மூடநம்பிக்கை நிறைந்தவை என்றும் சொல்லும் அதே வேளையில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பேசும்பொழுது கூட புறநானூற்றைப் பற்றி பேசி அரங்கத்தை கையோசையால் அதிரச் செய்தவர்.அதை விட முக்கியமானது  தமிழ் மொழியிலே படித்தாலும் தலைமகானாய் உயர முடியும் என்று உணர்த்திய உத்தமர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை பள்ளி,கல்லூரி விடுமுறை என நேற்றிரவு முதலே ஊடகங்களில் தகவல் வெளியாகிக் கொண்டே இருந்தன.தமிழக அரசின் சார்பிலும் எவ்வித மறுப்பு அறிவிப்பும் வெளியாகவில்லை.ஆனால் இன்று காலை வழக்கம் போல் பள்ளி செயல்படும் என பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்த போது குழப்பமடைந்த கல்வித் துறை அதற்கான காரணத்தை அறிந்து கொண்ட பொழுது கலாம் அவர்களின் மீதான அன்பும் மதிப்பும் ஒருபடி மேலோங்கியது.

 "நான் இறந்து போய் விட்டால், அன்றைய தினம் விடுமுறை விட்டு விடக் கூடாது. என் மீது உண்மையான அன்பு கொண்டவர்களாக இருந்தால்,கூடுதலாக ஒருநாள்   வேலை பார்க்க வேண்டும்'' என்று இந்திய சமூகத்தின் தலைவர்கள் யாரும் கூறியது கிடையாது.ஆனால் நமது கலாம் அவர்கள் தனது குறிப்பேட்டில் இவ்வாறு குறிப்பிட்டிருந்ததன் காரணம் அவர் இந்த தேசத்தின் மீதும் இத்தேச மனிதர்களும் மீதும் கொண்ட உண்மையான காதலேயன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?

அவர் வெறும் குடியரசுத் தலைவர் மட்டும் கிடையாது, விஞ்ஞானி மட்டும் கிடையாது,இந்திய ஏவுகணையின் தந்தை மட்டும் கிடையாது, இந்தியா vision 2020 கொள்கையை கொடுத்தவர் மட்டும் கிடையாது.

ஆனால் அவர் இவைகளுக்கெல்லாம் மேலானவர்! அவர் ஒரு ஆசிரியர்!

.
                                                                  உங்களால் பெருமை கொள்ளும்
                                                                                        மணியரசன்.

8 comments:

  1. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உடல் நாளை (புதன்கிழமை) மதியம் 1 மணியளவில் ராமேஸ்வரம் கொண்டு வரப்படுகிறது. பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு வியாழக்கிழமை இறுதிச் சடங்குகள் நடைபெறுகிறது.

    அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாளை மறுநாள்( வியாழக்கிழமை) தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் அனைத்திற்கும் பொது விடுமுறை விடுக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    ReplyDelete
  2. We salute u sir..... w miss u very much. ....

    ReplyDelete
  3. மரணம் முத்தமிட்டது எங்கள் மண்ணின் மைந்தரை...

    விதைத்தவர்கள் உறங்களாம்.....

    விதைகள் உறங்குவதில்லை ... !

    நீ விதைத்த விதையாய் உம் பணியை தொடருவோம் ஐயா...

    நிம்மதியாய் இறைவன் திருவடியில் நித்திரை கொள்வாயாக... 🙏😞

    ReplyDelete
  4. மரணம் முத்தமிட்டது எங்கள் மண்ணின் மைந்தரை...

    விதைத்தவர்கள் உறங்களாம்.....

    விதைகள் உறங்குவதில்லை ... !

    நீ விதைத்த விதையாய் உம் பணியை தொடருவோம் ஐயா...

    நிம்மதியாய் இறைவன் திருவடியில் நித்திரை கொள்வாயாக... 🙏😞

    ReplyDelete
  5. தன்னூயிர் தான் அறப்பெற்றானை ஏனைய
    மண்ணூயிர்
    எல்லாம் தொழும்.

    உலகின் சிறப்பை கண்டு வியப்பவன் மனிதன்

    தன் வாழ்வையே சிறப்பாய் மாற்றுபவன்
    இறைவன்.

    தமிழா
    இன்றேனும்
    உணர்


    ஏழ்மை மற
    ஏக்கம் துற
    ஏட்டை படி
    நாட்டை வடி

    களிப்பை மறு
    எளிமை பெறு

    அன்பை விதை
    மாண்பை அறு

    செருக்கை விடு
    கனவை தொடு

    நீயும் ஒரு அப்துல் கலாம்.

    GP

    ReplyDelete
  6. நிகழ்ச்சியொன்றில் குத்துவிளக்கு ஏற்றும் முன் கலாம் அவர்கள் பேசியது...
    குத்துவிளக்கு இந்துக்களின் அடையாளம்.
    அதற்கு ஒளிதரும் மெழுகுவர்த்தி கிறிஸ்துவர்களின் அடையாளம்.
    அதை ஏற்றும் நான் ஒரு இஸ்லாமியன்.
    இதுதான் எங்கள் இந்தியா.
    - A.P.J Abdul kalam
    ...~_~

    ReplyDelete
  7. நிகழ்ச்சியொன்றில் குத்துவிளக்கு ஏற்றும் முன் கலாம் அவர்கள் பேசியது...
    குத்துவிளக்கு இந்துக்களின் அடையாளம்.
    அதற்கு ஒளிதரும் மெழுகுவர்த்தி கிறிஸ்துவர்களின் அடையாளம்.
    அதை ஏற்றும் நான் ஒரு இஸ்லாமியன்.
    இதுதான் எங்கள் இந்தியா.
    - A.P.J Abdul kalam
    ...~_~

    ReplyDelete
  8. Iruntha oru thalaivanum vinnukku senrar. Eni intha mannukku entha thalaivanai nam intha thalaimuraiyinar kanapogirom......

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி