TNPSC: குழந்தை நல அலுவலர்கள் நியமன அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்: டி.என்.பி.எஸ்.சி தலைவர் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 27, 2015

TNPSC: குழந்தை நல அலுவலர்கள் நியமன அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்: டி.என்.பி.எஸ்.சி தலைவர் அறிவிப்பு

தமிழ்நாட்டில் 89 குழந்தை நல அலுவலர் காலியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி) தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.


குரூப்-2 பணியிடங்களுக்கான முதன்மை தேர்வுகள் தமிழ்நாடு முழுவதும் 1,511 மையங்களில் நேற்று நடைபெற்றது. காலியாக உள்ள 1,241 பணியிடங்களுக்காக நடைபெற்ற இந்த தேர்வை எழுத 6 லட்சத்து 20 ஆயிரத்து 220 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். சென்னையில் இந்த தேர்வு 167 மையங்களில் நடைபெற்றது. இதில் 64 ஆயிரத்து 309 பேர் தேர்வு எழுதினர். சென்னை சாந்தோமில் உள்ள ரோசரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குரூப் 2 தேர்வை டி.என்.பி.எஸ்.சி தலைவர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன் நேரில் பார்வையிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:

தமிழ்நாடு சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பேறு கால மற்றும் குழந்தை நல அலுவலர்களுக்கான பொறுப்புகள் முதல் முறையாக டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்பப்படவுள்ளன. தற்போது இந்த பொறுப்பில் 89 காலியிடங்கள் உள்ளன. பி.எஸ்.சி.நர்சிங் படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

குரூப் -1 தேர்வுகளுக்கு கடந்த 24-ம் தேதி வரை 60 ஆயிரத்து 444 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆகஸ்ட் 9-ம் தேதி வரை இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். கடந்த நான்கு ஆண்டுகளில் டி.என்.பி.எஸ்.சி மூலம் 40 ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் வேலையில் நியமிக்கப் பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 11 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குரூப் 2 தேர்வுகள் முறை யாக நடப்பதை கண்காணிக்க 2,904 தலைமை கண்காணிப் பாளர்களும் சுமார் 31 ஆயிரம் கண்காணிப்பாளர்களும் பணியில் அமர்த்தப்பட்டனர். இது தவிர 500 பறக்கும் படையினர் தேர்வு மையங்களில் சோதனையிட்டனர். 1000 பேருக்கு மேற்பட்டோர் தேர்வு எழுதிய மையங்களில் வெப் கேமரா பொருத்தப்பட்டிருந்தது. 1000-க்கு குறைவானோர் தேர்வு எழுதிய மையங்களில் வீடியோ பதிவு செய்ய 1800 வீடியோ பதிவாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி