16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய கலெக்டர்களிடம் மனு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 2, 2015

16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய கலெக்டர்களிடம் மனு

தமிழகத்தில் 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்யக்கோரி, ஆசிரியர்கள் கலெக்டர்கள் மூலம் முதல்வருக்கு மனு அனுப்பினர்.மாநிலஅளவில், அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப மாதம் ரூ.5,000 சம்பளத்தில் 16,549 பகுதி நேர ஆசிரியர்களை முதல்வர் ஜெ.,கடந்த 2012ல் நியமித்தார்.


ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, 2014ல்ஏப்ரல் முதல் சம்பளத்தில் ரூ.2 ஆயிரம் அதிகரித்து வழங்கப்பட்டது.மேலும், அதற்கான நிலுவை தொகையாக ஒவ்வொரு பகுதி நேர ஆசிரியருக்கும் ரூ.12 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டது. இனசுழற்சி, நேர்முக தேர்வு மூலம் நியமிக்கப்பட்டபகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சிவகங்கை கலெக்டர் மலர்விழியிடம் மனு அளித்தனர்.கூட்டமைப்பு மாநில தலைவர் எம்.ராஜா, சிவகங்கை தலைவர் குமரேசன் கூறியதாவது: முதல்வர் ஜெ., எங்கள் கோரிக்கையை ஏற்று, சம்பள உயர்வு வழங்கினார். தற்போது கருணை கூர்ந்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் கலெக்டரிடம், பகுதி நேர ஆசிரியர்கள் மனு அளித்தனர், என்றனர்.

2 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி