கோவை வேளாண் பல்கலை 'டிப்ளமோ' படிப்பு கலந்தாய்வு; 229 மாணவர் தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 4, 2015

கோவை வேளாண் பல்கலை 'டிப்ளமோ' படிப்பு கலந்தாய்வு; 229 மாணவர் தேர்வு

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில், நேற்று துவங்கிய 'டிப்ளமோ' படிப்புக்கான கலந்தாய்வில், 229 பேர் தாங்கள் விரும்பிய இடங்களை தேர்வு செய்தனர்.தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ், கோவில்பட்டி, அம்பாசமுத்திரம், தஞ்சை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் எட்டு அரசு உதவிபெறும் கல்லுாரிகள்தவிர, ஆறு தனியார் கல்லுாரிகள் உள்ளன; இக்கல்லுாரிகளில், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை ஆகிய இரு 'டிப்ளமோ' படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.


அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், 360 இடங்கள், தனியார் கல்லுாரிகளில், 167 இடங்கள் என, 527 இடங்கள் இப்படிப்புகளுக்கு உள்ளன.இதில், குமரி மாவட்டம் பேச்சிப்பாறையிலுள்ள, அரசு உதவிபெறும் கல்லுாரியில் மட்டுமே, 40 இடங்களுக்கு தோட்டக்கலை படிப்பு உள்ளது.இக்கல்லுாரிகளில் முதலாமாண்டு சேர்க்கைக்கு, மாநிலம் முழுவதும் 1,847 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில், தரப்பட்டியலின் அடிப்படையில், 800 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


துவக்க நாளான நேற்று, 229 பேர் தாங்கள் விரும்பிய கல்லுாரிகளை தேர்வு செய்தனர். நிறைவு நாளான இன்று, 400 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.பல்கலை மாணவர் சேர்க்கைக்குழு சேர்மன் மகிமைராஜ் கூறுகையில், ''முதல் நாள் அழைப்பு விடுக்கப்பட்ட, 400 பேரில், 229 பேர் பங்கேற்று, தாங்கள் விரும்பிய கல்லுாரிகளை தேர்வு செய்தனர். நாளை (இன்று),400 மாணவர்கள் தரப்பட்டியல் அடிப்படையில் அழைக்கப்பட்டுள்ளனர்,'' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி