தாய்சேய் நல அதிகாரிகள் தேர்வு முடிவுகள் 2 மாதத்தில் வெளியாகும்: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 21, 2015

தாய்சேய் நல அதிகாரிகள் தேர்வு முடிவுகள் 2 மாதத்தில் வெளியாகும்: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி

தாய்சேய் நல அலுவலர் பதவிக்கான போட்டி தேர்வை டி.என்.பி.எஸ்.சி. இன்று நடத்தியது. 89 பதவிகளுக்கு நடந்த தேர்விற்கு 12,140 பேர் விண்ணப்பித்து இருந்தனர். சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் தீவிர கண்காணிப்புடன் தேர்வு நடந்தது.



சென்னையில் எழும்பூர் அரசு மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 21 இடங்களில் தேர்வு நடந்தது.தேர்வு மையத்தை டி.என்.பி.எஸ்.சி. சேர்மன் பாலசுப்பிரமணியன் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சோபனா ஆகியோர் பார்வையிட்டனர். மாநில பெண்கள் பள்ளி மையத்திற்கு சென்ற அவர்கள் அங்கு ஏற்பாடு செய்திருந்த பாதுகாப்பையும் பார்த்தனர்.


பின்னர் டி,என்.பி.எஸ்.சி. தலைவர் பாலசுப்பரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:–


டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிடுவதற்கு வசதியாக தேர்வுக்கான புதிய விவரங்கள், சான்றிதழ்கள் உள்ளிட்ட தகவல்களை இணைய தளத்தின் ஒரு பக்கத்தில் சேகரித்து வைப்பதற்காக புதிய நடைமுறையை உருவாக்கி உள்ளோம்.அந்த சுய விவர இணைய தளம் அடுத்த வாரம் செயல்படுத்தப்படும். புதிதாக தேர்வு எழுதக்கூடியவர்களும், ஏற்கனவே தேர்வு எழுதி வருபவர்களும் இந்த புதிய நடைமுறையை பின்பற்ற வேண்டும்.விண்ணப்பதாரர்கள் தங்களின் சான்றிதழ் போன்ற ஆவணங்களை இந்த இணைய பக்கம் வழியாக அனுப்பலாம். இதன் மூலம் சான்றிதழ் சரிபார்ப்பு போன்ற தேர்வுத்துறை நடவடிக்கைகள் விரைவாக செயல்படுத்த முடியும்.மேலும் தேர்வு கட்டண சலுகை பெறுபவர்கள், எத்தனை முறை பெற்று இருக்கிறார்கள் என்பது போன்ற தகவல்களும் விண்ணப்பதாரர்களுக்கு தெரியவரும். தாய்சேய் நல அலுவலர் தேர்வு எழுதி உள்ள தேர்வர்களுக்கு கீ–ஆன்சர் இந்த வாரத்தில் வெளியிடப்படும். தேர்வு முடிவுகள் 2 மாதத்திற்குள் வெளிவரும்.

இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி