வாட்ஸ் அப் தகவல்களை 90 நாட்களுக்கு அழிக்கக்கூடாது: மத்திய அரசு புதிய வரைவு கொள்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 22, 2015

வாட்ஸ் அப் தகவல்களை 90 நாட்களுக்கு அழிக்கக்கூடாது: மத்திய அரசு புதிய வரைவு கொள்கை

வாட்ஸ் அப் தகவல்களை 90 நாட்களுக்கு அழிக்கக்கூடாது என்ற நடைமுறையை செயல்படுத்த மத்திய அரசு புதிய வரைவு கொள்கையை கொண்டு வந்துள்ளது.இதுகுறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு அடுத்த மாதம் 16ம் தேதி வரை தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


வாட்ஸ் அப் செயலியில் செல்போன் மூலம் மின்னஞ்சல் தகவல்கள், பேட்டோ, வீடியோ ஆகியவை உடனடியாக அனுப்பி வைக்கப்படுகிறது.


இந்நிலையில், வாட்ஸ்அப் செயலி மூலம் அனுப்பப்படும் தகவல்களை பாதுகாப்பு கருதி 90 நாட்களுக்கு சேமித்து வைக்க வேண்டும் எனவும், அவ்வாறு சேமிக்காமல் டேட்டாக்களை அழித்துவிட்டால் அது சட்டவிரோதம் என அறிவிக்க வகை செய்யும் புதிய தேசிய வரைவு கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.இதுபோல், சேவையை வழங்கும் நிறுவனங்களும் இந்தியாவிலேயே பயனாளர்களின் தகவல்களை சேமித்து வைக்கும் வசதிகளை ஏற்படுத்துவதும் கட்டாயம்.


இந்த திட்டம் குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பு அதிகாரியாக விஞ்ஞானி கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு akrishnan@deity.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி