பணிவரன்முறை செய்யாததால் வி.ஏ.ஓ.,க்கள் தவிப்பு;அரசு மீது குற்றச்சாட்டு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 28, 2015

பணிவரன்முறை செய்யாததால் வி.ஏ.ஓ.,க்கள் தவிப்பு;அரசு மீது குற்றச்சாட்டு

சிவகங்கை;டி.என்.பி.எஸ்.சி., மூலம் பணியில் சேர்ந்த வி.ஏ.ஓ.,க்களைபணிவரன்முறை செய்யாமல் அரசு இழுத்தடிப்பதாக புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி., மூலம் கடந்த 2008ல் இருந்து இதுவரை 6ஆயிரம் வி.ஏ.ஓ.,க்கள் நேரடியாக தேர்வாகியுள்ளனர்.


இவர்கள் பணியில் சேர்ந்து ஒரு ஆண்டுக்கு பின் தாசில்தார் பரிந்துரைப்படி, வி.ஏ.ஓ.,க்களை ஆர்.டி.ஓ.,பணிவரன்முறை செய்யவேண்டும். பணியில் சேர்ந்து 2 ஆண்டுக்கு பின் அவர் மீது எவ்வித குற்றச்சாட்டும் இல்லாத பட்சத்தில், அவர்களுக்கு 'புரபேசனரி ஆர்டர்' வழங்க வேண்டும். ஆனால் வழங்கவில்லை. இதனால் மாநில அளவில் 4 ஆயிரம் வி.ஏ.ஓ.,க்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.வி.ஏ.ஓ., சங்க சிவகங்கை மாவட்ட தலைவர் கோபிநாத் கூறுகையில், “2008ல் இருந்து பணியில் சேர்ந்த வி.ஏ.ஓ.,க்களில் 2 ஆயிரம் பேர் உதவியாளராக பதவி உயர்வு பெற்றுவிட்டனர்.


தற்போதுள்ள 4 ஆயிரம் பேருக்கு பணிவரன்முறை, சம்பளஉயர்வு, பணிப்பதிவேட்டில் விபரம்எழுதுதல் போன்ற எப்பணிகளையும் செய்யவில்லை.,” என்றார்.வி.ஏ.ஓ., சங்க மாநில பொது செயலாளர் கே.வெங்கடேஸ்வரன் கூறுகையில்,“புதிய வி.ஏ.ஓ.,க்கள் பணியில் சேர்ந்த ஒரு ஆண்டுக்கு பின் ஆர்.டி.ஓ.,க்கள் அவர்களைபணிவரன்முறை செய்யவேண்டும். அப்படி செய்யாமல் இருப்பது தவறு. வாரிசு அடிப்படையில் வி.ஏ.ஓ., பணியில் சேர்ந்தவர்களுக்கு, அரசே நேரடியாக பணிவரன்முறை செய்ய வேண்டும். அதற்கு தான் தற்போது கால தாமதம் ஆகிறது. அதையும் விரைந்து முடிக்க அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்,” என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி