ஆசிரியர்களுக்கு 10 கி.மீ. தொலைவுக்குள் தேர்தல் பணி: ஆட்சியரிடம் வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 19, 2015

ஆசிரியர்களுக்கு 10 கி.மீ. தொலைவுக்குள் தேர்தல் பணி: ஆட்சியரிடம் வலியுறுத்தல்

ஆசிரியர்களுக்கு அவர்கள் வசிப்பிடத்திலிருந்து 10 கி.மீ. தொலைவுக்குள் தேர்தல் பணி வழங்க வேண்டும் என, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.இதுதொடர்பாக, அமைப்பின் திருநெல்வேலி மாவட்டக் கிளைத் தலைவர் பி. ராஜ்குமார், செயலர் செ. பால்ராஜ், பொருளாளர் சே. சுப்பிரமணியன், நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை, ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் அளித்த மனு:2016இல் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.


தேர்தல் பணியின்போது ஏற்படும் பல்வேறு இன்னல்களைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆசிரியர்களின் உடல்நலம், குடும்பச் சூழல், பணி நிலை, ஆசிரியைகளின் பிரச்னை,பணியாற்றும் பள்ளிகள், மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.பள்ளிகளில் கல்வி பாதிக்கும் வகையில், ஆண்டு முழுவதும் தேர்தல் தொடர்பான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபடுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஆசிரியர்களின் வசிப்பிடத்திலிருந்து 100 முதல் 150 கி.மீ. தொலைவில்தேர்தல் பணிக்கு அனுப்புவதால் அவர்கள் இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக, ஆசிரியைகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ஆசிரியர்களின் வசிப்பிடத்திலிருந்து 10 கி.மீ. தொலைவுக்குள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்.உடல் நலம் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். கர்ப்பிணி ஆசிரியைகளை தேர்தல் பணியில் ஈடுபடுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.


வாக்குச்சாவடிப் பணிக்குச் செல்லும்போதும், பணி முடிந்து திரும்பும்போதும் ஆசிரியர்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் வாகன வசதி செய்ய வேண்டும்.தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், காவலர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். தேர்தல் பணியிடம் குறித்து அளிக்கப்படும் 2ஆவது கட்டப் பயிற்சியின்போது, தேர்தல் பணிக்கான மையம், அதற்கான ஆணை வழங்க வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணி செய்யும் ஆசிரியர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

1 comment:

  1. Yes sir...pl appointment teacher as a po 1 or po2 oR any post within 10 km surrounding area..we will do it with sincerely and nuatrally...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி