அரசு அலுவலகங்களில் சி.சி. டி.வி. கேமரா: 2 மாதங்களுக்குள்முடிவெடுக்க அரசுக்கு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 25, 2015

அரசு அலுவலகங்களில் சி.சி. டி.வி. கேமரா: 2 மாதங்களுக்குள்முடிவெடுக்க அரசுக்கு உத்தரவு

இடைத்தரகர்களால் நடைபெறும் ஊழலைத் தடுப்பதற்கு அனைத்து அரசு அலுவலகங்களிலும் சி.சி. டி.வி. கேமரா பொருத்தக் கோரிய மனுவை 2 மாதங்களுக்குள் தமிழக அரசு முடித்து வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.இதுதொடர்பாக கோவை நுகர்வோர் குரல் அமைப்பைச் சேர்ந்த என்.லோகு தாக்கல் செய்த மனு விவரம்:


அரசு அலுவலகங்களுக்குள் அங்கீகாரமில்லாதவர்கள் ஆவணங்களைக் கையாளவும்அனுமதிக்கப்படுகின்றனர். இதனால், ஆவணங்கள் பாதுகாப்பில்லாமல், காணாமல் போகவும் வாய்ப்புள்ளது. இதனால் பாதிப்புக்குள்ளாவது பொதுமக்கள்தான்.இதுபோன்றவர்கள் நுழைய கடுமையான கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை என்பதால், இடைத்தரகர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். எனவே, அரசு அலுவலகங்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.எனவே, ஊழலைத் தடுக்கவும், இடைத்தரகர்களை அடையாளம் காணவும், அவர்கள் எந்த அதிகாரியை சந்திக்கிறார்கள் என்பதைக் கண்டறியவும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் சி.சி. டி.வி. கேமராக்களை பொருத்த உத்தரவிட வேண்டும்என கோரியிருந்தார்.


இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி புஷ்பா சத்ய நாராயணா ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவு:இது தமிழக அரசின் கொள்கை முடிவுக்கு உள்பட்டது. மனுதாரின் கோரிக்கை மனுக்களை சட்டவிதிகளின்படி இரண்டு மாதங்களுக்குள் அரசு முடித்து வைக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி