அடுத்த கல்வியாண்டில் தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 1, 2015

அடுத்த கல்வியாண்டில் தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பு

அடுத்த ஆண்டில் கல்வி மேலும் செலவுமிக்கதாக மாற வாய்ப்பிருக்கிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக கடும் சேதத்தைச் சந்தித்த தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கனமழையால் பள்ளிக் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதால் கட்டண நிர்ணய கமிட்டியிடம் தனியார் பள்ளி நிர்வாகங்கள் முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளனர்.


கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூரில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளன. பள்ளிக் கட்டிடங்களுக்கு ஏற்பட்ட சேதம் காரணமாக பள்ளியின் மின் அமைப்புகள், பைப்லைன்கள், உட்பட பல சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சுகாதாரத்தை பராமரிக்கவும் சில செலவினங்கள் தனியார் பள்ளிகளுக்கு காத்திருக்கிறது.“அவ்வளவாக சேதமில்லாத பெரிய பள்ளிகள் ரூ.5 லட்சம் வரையில் செலவிட்டுள்ளது. எனவே சேதம் அதிகம் ஏற்பட்ட பள்ளிகள் மேலும் அதிக தொகை செலவிட வேண்டி வரும்” என்று பள்ளி முதல்வர் ஒருவர் தெரிவித்தார்.மாநில கல்வி ஆலோசகர் பி.புருஷோத்தமன் இது பற்றி கூறும்போது, “பெரும்பாலான பள்ளிகள் கல்விக் கட்டணத்தை உயர்த்தவுள்ளன.


சேதத்துக்கு செலவிடப்பட்ட தொகைமற்றும் பரமாரிப்பு உள்ளிட்ட செலவு விவரங்களை பள்ளி நிர்வாகத்திடமிருந்து கேட்டுள்ளோம்” என்றார்.மற்றொரு மூத்த கல்வித்துறை அதிகாரி தெரிவிக்கும் போது, “பைப்லைன், கட்டிட சேத விவரம், மின் இணைப்பு பரமாரிப்பு உள்ளிட்ட செலவு விவரங்களை சமர்ப்பிக்குமாறு பள்ளிகளிடம் கேட்டுள்ளோம். சேதத்தை சரிசெய்ய சராசரியாக பள்ளிகள் ரூ.5 லட்சம் முதல் 8 லட்சம் வரை கோரியுள்ளன.மாநில அரசு மத்திய அரசுக்கு இந்த விவரங்களை அனுப்ப வேண்டியுள்ளது” என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி