அரசு நிதி வருவாயில் 90 சதவீதம் ஊழியர் சம்பளத்திற்கு செல்கிறதா: அரசு ஊழியர் சங்கம்மறுப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 7, 2016

அரசு நிதி வருவாயில் 90 சதவீதம் ஊழியர் சம்பளத்திற்கு செல்கிறதா: அரசு ஊழியர் சங்கம்மறுப்பு

அரசு நிதி வருவாயில் 90 சதவீதம் அரசு ஊழியர்களின் சம்பளத் திற்கு செல்கிறது என அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ள தகவல் தவறானது,'' என, சங்க மாநில பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன்தெரிவித்தார்.தேனியில் அவர் கூறியதாவது:


20 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தலைமையில் 67 சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் பிப். 10 முதல் ஈடுபடுகின்றன. மாநில முழுவதும் 3 லட்சம் அரசு ஊழியர்களும், 2 லட்சம் தொகுப்பூதியம் பெறுபவர்களும் பங்கேற்பர்.அரசு ஊழியர் வசூலித்த தானே புயல் நிவாரண நிதியை கூட முதல்வர், தலைமை செயலாளரை சந்தித்து வழங்க முடியவில்லை. சங்க பிரதிநிதிகளை சந்திப்பது இல்லை.அரசின் நிதிவருவாயில் 90 சதவீதம் அரசு ஊழியர்களின் சம்பளத்திற்காக செலவிடுவதாக அமைச்சர் பன்னீர் செல்வம் தவறான தகவலை கூறி வருகிறார்.

அரசின் நிதிவருவாய் 41,215,57 லட்சம் கோடி. இதில் கல்வி மானியத்திற்கு 40 சதவீத நிதி செலவிடப்படுகிறது. மீதியுள்ள தொகை ரூ.30 ஆயிரம் கோடி. இதில் முதல்வர்,அமைச்சர், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற உயர்அதிகாரிகள் சம்பளம் பெறுகின்றனர். 20 ஆயிரம் கோடியில் 8 லட்சம் அரசு ஊழியர்கள் சம்பளத்திற்காக செலவிடப்படுகிறது. இது அரசின் வருவாயில் 30 சதவீதம், என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி