இருவிதமான விலையில் இணைய சேவை: டிராய் மறுப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 8, 2016

இருவிதமான விலையில் இணைய சேவை: டிராய் மறுப்பு

இருவிதமான விலையில் இணைய சேவை வழங்குவதற்கு இந்திய தொலைதொடர்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) மறுப்பு தெரிவித்துள்ளது.இணையச் சேவை அளிக்கும் நிறுவனங்களும், தொலைத் தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங்களும் ஒவ்வொரு இணையதளத்தைப் பயன்படுத்தவும்  வெவ்வேறு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்என வலியுறுத்தி வந்தனர்.


இந்நிலையில் சமநிலை இணையச் சேவையை உறுதி செய்ய வேண்டும்என்பதை வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் பலவித இயக்கங்களை நடத்தினர்.இதையடுத்து இந்தியாவில் தொலைத் தொடர்பு சேவையை ஒழுங்குப்படுத்தும் டிராய் அமைப்பு, பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு நடத்தியது.இந்நிலையில் சமநிலை இணையச் சேவை தொடர்பாக முடிவெடுப்பதில் மத்திய அரசு தயக்கம் காட்டி வருவதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் குற்றம்சாட்டியிருந்தனர்.இதையடுத்து டிராய் இன்று வெளியிட்ட அறிக்கையில், இணையச்சேவை வழங்கும் நிறுவனங்கள் இருவிதமான விலை நிர்ணயம் செய்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.இந்த தடையால் ஃபேஸ்புக் நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தொடங்கவிருந்த 'ப்ரீ பேசிஸ்' திட்டத்த்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி