அரசு பள்ளியில் கட்டணம் வசூல்: மாவட்ட கல்வி அலுவலர் நேரில் விசாரணை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 14, 2017

அரசு பள்ளியில் கட்டணம் வசூல்: மாவட்ட கல்வி அலுவலர் நேரில் விசாரணை.

கூடுவாஞ்சேரியில் உள்ள அரசு பள்ளியில் கல்விக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து மாவட்ட கல்வி அலுவலர் நேற்று நேரில் விசாரணை மேற்கொண்டார்.
கூடுவாஞ்சேரியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதியதாக 11-ம் வகுப்பில் சேரும் மாணவிகளிடம் கட்டணம் வசூலிக் கப்படுவதாகவும், இதற்காக தனியாக ஜெராக்ஸ் கடையில் வசூல் நடப்பதாகவும், அங்கு பணம் செலுத்தி ரசீது பெற்றால் மட்டுமே சேர்க்கை நடைபெறுவ தாகவும் புகார்கள் எழுந்தன.இதனையடுத்து நேற்று காலை காஞ்சி மாவட்ட கல்வி அலுவலர் ராஜரத்தினம் கூடுவாஞ்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்று புதியதாக சேர்ந்த மாணவர்கள், அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் , பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ஆகியோரிடம் 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டார்.

இது குறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறும்போது, “புதியதாக சேரும் மாணவிகளிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.இந்த விசாரணையின் அறிக்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்கப்படும். பின்னர் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி