எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு: அகில இந்திய ஒதுக்கீடு, நிகர்நிலை பல்கலை. கலந்தாய்வு - ஆன்லைனில் இன்று தொடக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 13, 2017

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு: அகில இந்திய ஒதுக்கீடு, நிகர்நிலை பல்கலை. கலந்தாய்வு - ஆன்லைனில் இன்று தொடக்கம்.

அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வு ஆன் லைனில் இன்று தொடங்குகிறது.
நாடுமுழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 15 சதவீத எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட் டுள்ளன.தமிழகத்தில் இருந்து மட்டும் 456 எம்பிபிஎஸ் இடங்கள், 30 பிடிஎஸ் இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET - நீட்) தகுதி பெற்றவர்களைக் கொண்டு நிரப்பப்படுகிறது. கலந்தாய்வில் பங்கேற்பதற்கு www.mcc.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்வது கடந்த 3-ம் தேதி தொடங்கி 11-ம் தேதியுடன் முடிவடைந்தது. (நீட்) தேர்வில் தகுதி பெற்றவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க பதிவு செய்தனர்.

கலந்தாய்வு தொடக்கம்

இந்நிலையில் அகில இந்திய ஒதுக்கீடு எம்பிபிஎஸ், பிடிஎஸ்இடங்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஆன்லைனில் இன்றும்,நாளையும் நடக்கிறது. அதற்கான முடிவுகள் வரும் 15-ம் தேதி வெளியிடப்படுகிறது. கலந்தாய்வில் இடங்களைப் பெற்றவர்கள் வரும் 16-ம் தேதி முதல் 22-ம் தேதிக்குள் தாங்கள் தேர்வு செய்த கல்லூரிகளில் சேர வேண்டும். இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி 7-ம்தேதி வரை நடைபெற உள்ளது. அதற்கான முடிவுகள் ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியிடப்படுகிறது. கலந்தாய்வில் இடங்களைப் பெற்றவர்கள் ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் 16-ம் தேதிக்குள் தாங்கள் தேர்வு செய்த கல்லூரிகளில் சேர வேண்டும். அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வில் நிரப்பப்படாமல் மீதமுள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஆகஸ்ட் 16-ம் தேதி மாலை 5 மணிக்கு பின்னர் அந்தந்த மாநில அரசுகளிடம் திருப்பி ஒப்படைக்கப்பட உள்ளன.

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்

நாடுமுழுவதும் உள்ள நிகர் நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்தியப் பல்கலைக் கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ்,பிடிஎஸ் இடங்களுக்கான கலந் தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) நடத்துகிறது.இந்த கலந்தாய்வில் பங்கேற் பதற்கு www.mcc.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்வது கடந்த 5-ம் தேதி தொடங்கி 11-ம் தேதியுடன் முடிவடைந்தது. ‘நீட்’ தேர்வில் தகுதிப் பெற்றவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க பதிவு செய்தனர்.

முதல் கட்ட முடிவு

முதல் கட்ட கலந்தாய்வு ஆன்லைனில் இன்றும், நாளை யும் நடக்கிறது. அதற்கான முடிவு வரும் 15-ம் தேதி வெளி யிடப்படுகிறது. கலந்தாய்வில் இடங்களைப் பெற்றவர்கள் வரும் 16-ம் தேதி முதல் 22-ம் தேதிக்குள் தாங்கள் தேர்வு செய்த பல்கலைக்கழகங்களில் சேர வேண்டும். இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி 7-ம்தேதி வரை நடைபெற உள்ளது. அதற்கான முடிவுகள் ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியிடப்படுகிறது.கலந்தாய்வில் இடங்களை பெற்றவர்கள் ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் 16-ம் தேதிக்குள் தாங்கள் தேர்வு செய்த பல்கலைக்கழகங் களில் சேர வேண்டும். கலந்தாய் வில் நிரப்பப்படாமல் மீதமுள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஆகஸ்ட் 27-ம் தேதி மாலை 5 மணிக்கு பின்னர் அந்தந்த பல்கலைக்கழகங்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி