அண்ணா பல்கலை. உறுப்பு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை கோரி வழக்கு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 8, 2017

அண்ணா பல்கலை. உறுப்பு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை கோரி வழக்கு

அண்ணா பல்கலைக்கழகத்தின் 15 உறுப்பு கல்லூரிகளில் மாணவர் களை சேர்க்கத் தடை கோரிய மனு தொடர்பாக ஏஐசிடிஇ பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த எஸ்.உமர் பாரூக் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:அண்ணா பல்கலைக்கழகத் தின் பொறியியல் கல்லூரிகள் ஆரணி, விழுப்புரம், திண்டிவனம், காஞ்சிபுரம், பண்ருட்டி, அரிய லூர், திருக்குவளை, பட்டுக் கோட்டை, ராமநாதபுரம், திண்டுக் கல், நாகர்கோவில், தூத்துக்குடி, மதுரை, நெல்லை, கோவை, திருச்சி ஆகிய 16 இடங்களில் உள்ளன. இதில் திருச்சியை தவிர மற்ற 15 கல்லூரிகளும் பல ஆண்டுகளாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வருகின்றன.

இந்த 15 கல்லூரிகளிலும் மாணவர்களை சேர்க்கத் தடை விதிக்க வேண்டும். இக்கல்லூரி களில் தற்போது படிக்கும்மாண வர்களை ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற அரசு பொறியியல் கல்லூரி களுக்கு மாற்ற உத்தரவிட வேண் டும் என மனுவில் கூறப் பட்டிருந்தது.இந்த மனு நீதிபதிகள் கே.கே. சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு ஏஐசிடிஇ தலைவர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் 13-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி