பொறியியல் மாணவர் சேர்க்கை: 53,856 பேருக்கு இதுவரை ஒதுக்கீட்டு ஆணை - அண்ணா பல்கலைக்கழகம் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 4, 2017

பொறியியல் மாணவர் சேர்க்கை: 53,856 பேருக்கு இதுவரை ஒதுக்கீட்டு ஆணை - அண்ணா பல்கலைக்கழகம் தகவல்

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு மூலம் இதுவரையில் 53,856 மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித் துள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புக்கானபொது கலந்தாய்வு ஜூலை 23-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 12-வது நாளான நேற்று 7,832 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

 கலந் தாய்வில் கலந்துகொண்டு 4,726 பேர் கல்லூரியை தேர்வுசெய்தனர். 3,057 பேர் கலந்தாய்வுக்கு வரவில்லை. இதுவரையில் 53 ஆயிரத்து 856 மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் ஜெ.இந்துமதி அறிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் கலந்தாய்வுக்கு 149 முதல் 144 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ள மாணவர்கள் அழைக் கப்பட்டுள்ளனர். முதல் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 11-ம் தேதி முடிவடைகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி