தமிழ்நாட்டில் கல்வித்தரத்தை மேம்படுத்த வேண்டும்: தேசிய கல்வி மேலாண்மை பல்கலை. துணைவேந்தர் வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 21, 2017

தமிழ்நாட்டில் கல்வித்தரத்தை மேம்படுத்த வேண்டும்: தேசிய கல்வி மேலாண்மை பல்கலை. துணைவேந்தர் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் கல்வித்தரத்தை மேம்படுத்துவதில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும் என்று தேசிய கல்வி மேலாண்மை மற்றும் திட்டமிடல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் என்.வி.வர்க்கீஸ் வலியுறுத்தினார்.
தமிழக அரசின் தொடக்கக் கல்வி இயக்ககம், தேசிய கல்வி மேலாண்மை மற்றும் திட்டமிடல் பல்கலைக்கழகம் சார்பில் மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கும், உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கும் சென்னையில் 2 நாட்கள் கல்வி மற்றும் மேலாண்மை பயிற்சி அளிக்கப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று இதைத் தொடங்கிவைத்து தேசிய கல்வி மேலாண்மை மற்றும் திட்டமிடல் பல்கலைக்கழக துணைவேந்தர் என்.வி.வர்க்கீஸ் பேசியதாவது:தமிழகம், கேரளம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள், கல்வியில் முன்னணி மாநிலங்களாகவிளங்குகின்றன. இந்த மாநிலங்கள் சமூக ரீதியாகவும் வளர்ச்சி அடைந்துள்ளன.

கேரளம், இமாச்சலப் பிரதேச மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் தொழில்துறை வளர்ச்சி மிகவும் அதிகம்.புதிய பொருளாதார கொள்கையின் காரணமாக பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டிருப்பது உண்மை.அதேநேரத்தில் அந்த கொள்கை, பொருளாதார சமத்துவம் இன்மையையும் உருவாக்கி விட்டது என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். வளர்ச்சி நடந்துகொண்டுதான் இருக்கிறது.ஆனால், பரவலான வளர்ச்சியாக, அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக அது அமையவில்லை. அதேநேரத்தில், தமிழகம், கேரளம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்த குற்றச்சாட்டு பொருந்தாது. சமூக போராட்டங்களுக்கு வளர்ச்சியில் முக்கிய பங்கு உண்டு.தமிழகத்தில் 2015-ம் ஆண்டு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சமூக போராட்டங்கள் நடந்துள்ளன. போராட்டங்களுக்குப் பெயர் போன கேரளாவில்கூட அந்த காலகட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் குறைவான போராட்டங்களே நிகழ்ந்திருக்கின்றன.தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குகிறது என்பதில் சந்தேகமில்லை. அதேநேரத்தில் கல்வித்தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு வர்க்கீஸ் கூறினார்.

முன்னதாக, தொடக்கக் கல்வி இயக்குநர் எஸ்.கார்மேகம் வரவேற்றார். தேசிய கல்வி மேலாண்மை மற்றும் திட்டமிடல் பல்கலைக்கழக கல்வி மேலாண்மைத் துறையின் தலைவர் பேராசிரியர் குமார் சுரேஷ் பயிற்சி குறித்து அறிமுகவுரை ஆற்றினார். நிறைவாக, தொடக்கக் கல்வி இணை இயக்குநர் இரா.பாஸ்கர சேதுபதி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி