Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

புதிய மாணவ முதலமைச்சர்,துணை முதல்வர் பதவியேற்புமாணவ சட்டமன்றம் பதவியேற்பு விழா

புதிய மாணவ சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்வு.

விறுவிறுப்பான வாக்கு பதிவில் வெற்றி பெற்ற மாணவர்கள்.

தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில்ஜனநாயக முறைப்படி மாணவர்களுக்கான  தேர்தல்  வாக்குச்சாவடி அமைத்து
ஒட்டுபோடப்பட்டு ,கையில் மை வைத்து ,வாக்கு பதிவு நடைபெற்று நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.அதன் தொடர்ச்சியாகமாணவ சட்டமன்ற முதலமைச்சர் உட்படமாணவ அமைச்சர்கள் அனைவருக்கும் பதவிபிரமாணம் செய்து வைத்து பதவியேற்பு விழா நடைபெற்றது.

விழாவிற்கு வந்தவர்கள் அனைவரையும்பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வரவேற்றார்.பள்ளி செயலர் அரு .சோமசுந்தரம் விழாவிற்கு  தலைமை தாங்கினார்.தேவகோட்டை நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி,ஸ்ரீ சேவுகன்  அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சந்திரமோகன் ,ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் ,பேராசிரியர் பாகை  கண்ணதாசன் ஆகியோர் புதிய மாணவ தலைவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.பதவியேற்ற மாணவ தலைவர்கள் உறுதிமொழி வாசித்து தங்களின் புகைப்படம் ஒட்டிய சான்றிதழை பெற்றுக்கொண்டனர்.புதிய தலைவராக அஜய் பிரகாஷும்,துணை தலைவராக காயத்ரியும்,கல்வி அமைச்சராக கார்த்திகேயனும்,வேளாண் துறை அமைச்சராக ராஜேஷும்,மக்கள் தொடர்பு துறை அமைச்சராக விக்னேஷும்,உணவு துறை அமைச்சராக ராஜேஷும்,சுகாதார துறை அமைச்சராக சபரியும் ,பாதுகாப்பு துறை அமைச்சராக ஜெனிபரும்,அறிவியல் மேம்பாட்டு துறை அமைச்சராக நந்தகுமாரும் பதவியேற்று கொண்டனர்.

மாணவர்கள் புதிய பொறுப்புகளை சிறப்பாக செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.மேலும் வாக்களித்த அனைத்து மாணவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.நிறைவாக பள்ளி ஆசிரியை முத்து லெட்சுமி நன்றி கூறினார்.தேர்தலுக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் முத்து மீனாள்,ஸ்ரீதர்,கருப்பையா ,சோமசுந்தரம்,செல்வம் ஆகியோர்செய்து இருந்தனர்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான தேர்தல் நடைபெற்று வெற்றி பெற்ற அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து பதவியேற்பு விழா நடைபெற்றது.

5 comments

 1. நண்பர்களுக்கு வணக்கம்: நாளை ஒரு நாள் மட்டுமே உள்ளது.நம்முடைய போராட்டம் கண்டிப்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.100% நண்பர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு ஆதரவு அளித்தால் மட்டுமே நமக்கான தீர்வு எட்டப்படும்.கண்டிப்பாக இந்த போராட்டமே நம் கூட்டமைப்பின் கடைசி போராட்டம் என்பதை தெரவித்துக் கொள்கிறோம்.தற்சமயம் வரை அமைச்சரில் இருந்து அனைத்து தரப்பினரிடமும் தொடர்ந்து பேசி வருகிறோம்.நமக்கான தீர்வு கண்டிப்பாக எட்டப்படும் என்று தான் அனைத்து தரப்பிலும் பதில் வருகிறது. எனவே யாரும் மனம் தளர வேண்டாம்.நம்முடைய போராட்ட தகவலை மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்.நாளை ஒரு நாள் மட்டுமே உள்ளது.திருச்சி போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் கொத்துக் கொத்தாக இந்த இறுதி போராட்டத்திலும் கலந்து கொள்ளவும்.அதே போல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களும் தங்களது பணியை மிகச்சிறந்த முறையில் செய்து வருகிறீர்கள்.நன்ற! முடிந்த வரை அனைவரும் குடும்பத்தோடு கலந்து கொண்டு ஆதரவு அளியுங்கள்.இது எனக்கான போராட்டமோ,அண்ணன் இளங்கோவன் அவர்களுக்கான போராட்டமோ கிடையாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்...இனி 2013 தேர்வர்களுக்காக யாரும் களத்தில் இறங்கி தலைமை தாங்கி போராட்டம் நடத்த மாட்டார்கள் இந்த வாய்ப்பை நாம் அனைவரும் நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.இல்லாவிட்டால் இனி எந்த ஜென்மத்திலும் நாம் அரசு ஆசிரியர் ஆக முடியாது.போராட்டத்திற்கு ஆக வேண்டிய அனைத்து வேலைகளையும் தொடர்ந்து செய்து வருகிறோம்...கவலை வேண்டாம் உறுதியாக அமைச்சர் வாயில் இருந்து அறிவிப்பு வந்தால் மட்டுமே நாம் போராட்டத்தை முடித்துக் கொண்டு வருவோம்...இல்லையேல் அங்கேயே செத்து மடிவோம்...அனிதாவின் இறப்பை இந்த அரசு எப்படி கையாள்கிறது என்பதை அனைவரும் தினமும் அறிந்து கொண்டு வருகிறோம்....இவர்களை எச்சரிப்போம்! பணி வழங்காமல் எங்களை தற்கொலைக்கு தூண்டுகிறது என்பதை பத்திரிக்கையாளர்களடம் அழுத்தமாக முன் வைப்போம்....கல்வி கற்ற மாணவியையும் இந்த சமூகம் புறக்கணிக்கிறது...கற்றுக் கொடுக்கும் ஆசிரயரையும் இந்த அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.நாம் யாரென்று இந்த அரசுக்கு காட்டுவோம்....நீதி கிடைக்க வேண்டும்... இறுதியாக உங்கள் ஒவ்வொரு நண்பர்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன்..
  .இதுவே நம் கூட்டமைப்பின் கடைசி போராட்டம்!இறுதி போராட்டம்! உறுதி போராட்டம்! வாழ்வா ? சாவா? என்பதை தீர்மானிக்கும் போராட்டம் என்பதை மனதில் வைத்துக் கொண்டு அனைவரும் அவசியம் சிரமத்தை காரணம் சொல்லாமல் களத்தில் உங்கள் மனவேதனையை வெளிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்...குறிப்பு:போராட்டத்திற்கு வரும் நண்பர்கள் தங்கள் தகுதி தேர்வு சான்றிதழ் நகல் ஒன்றையும் உங்கள் புகைப்படம் (பாஸ்போர்ட் சைஸ் போட்டோ) ஒன்றையும் எடுத்து வரவும்...இடம் : ஈரோடு காளை மாடு சிலை முன்பு. நாள் : நாளை மறுதினம்: செப்டம்பர் 5 ....ஒன்று கூடுவோம்! வென்று காட்டுவோம்!!!நன்றி....🙏

  ReplyDelete
  Replies
  1. 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு

   2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர்க்கு
   பணி, முன்னுரிமை, சலுகை மதிப்பெண் வழங்க கோரி,
   போராட்டம்! போராட்டம்!
   இறுதியாக ஒரு போராட்டம்!
   ஈரோட்டில் போராட்டம்!

   அனைவரும் வாரீர்!

   நாள்: 05:09:2017 செவ்வாய்கிழமை
   நேரம்: காலை 10:30
   இடம்: முதன்மை கல்வி அலுவலகம்
   ஈரோடு
   ⚫ போராட்டத்திற்கு வரும் ஆசிரியர்கள் கருப்பு சட்டையும் ஆசிரியைகள் கருப்பு சேலையும் அணிந்து வரவும்.

   🔴 கல்வி அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் முற்றுகை போராட்டம்

   ⚫ வெற்று அறிக்கைவிடும் ஆளும் அரசின் கவனத்தை ஈர்க்கும்விதத்தில் நூதன போராட்டம்


   🔵 கூடுதல் தகவல்கள் மற்றும் விவரங்கள் போராட்ட களத்தில் அறிவிக்கப்படும்
   நன்றி
   2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி
   பெற்றோர் கூட்டமபை்பு.
   மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்
   வடிவேல் சுந்தர் 8012776142.
   இளங்கோவன் 8778229465

   Delete
 2. Salugai mathipenna epdi .. 150 ku 150 koduthuruvoma..

  ReplyDelete
 3. Salugai mathipenna epdi .. 150 ku 150 koduthuruvoma..

  ReplyDelete
 4. Myself 2013 65 cutoff, lost job in 1.2 mark difference. This time 2017, 69 my cutoff. Is it any compulsion to give job for all passed candidates in 2013??? Clearly trb said, tet exam marks valid for 7 years and there is no priority given in upcoming posts.if u need high marks, just right again tet and improve your marks. All are accept that condition and write exams.then why u protest agains trb??? If u truely protest against trb,then why u people allowed trb to conduct 2017 tet exam???

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives