Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

கண்காணிப்பு வளையத்திற்குள் வருமா அரசு உதவிபெறும் பள்ளிகள்?

தமிழக அரசின்உதவியோடு செயல்பட்டு வரும் உதவிபெறும் பள்ளிகள், விதிமுறைகளை மீறிசுயநிதிப் பள்ளிகளைப் போல்செயல்படுவதை தடுக்க தமிழக அரசுநடவடிக்கை மேற்கொள்ள வேண்டியகட்டாயம் ஏற்பட்டுள்ளது.
1950-களின் பிற்பகுதியில் தமிழகத்தில்உள்ள அனைத்துசிறுவர்களும் கல்விஅறிவு பெற வேண்டும் என அப்போதையதமிழக அரசு சார்பில் தீவிர முயற்சிமேற்கொள்ளப்பட்டது. அன்றையநிலையில் அரசுப் பள்ளிகள் அதிகம்இல்லாத காரணத்தால், அந்தந்தபகுதிகளில் உள்ள செல்வந்தர்களின்உதவியுடன் அரசு உதவி பெறும்பள்ளிகள் தொடங்கப்பட்டன. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும்அனைத்து சலுகைகளும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும்வழங்கப்பட்டது. உதவி பெறும்பள்ளிகளைநிர்வகிக்கும் பொறுப்புமட்டும், அந்தந்த தாளாளர்கள் வசம்ஒப்படைக்கப்பட்டது. இந்த நடைமுறைஇன்று வரை பின்பற்றப்பட்டு வருகிறது.உதவி பெறும் பள்ளிகள் மட்டுமின்றி,மெட்ரிக், சுய நிதி, சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இபாடத்திட்ட பள்ளிகள் என பல்வேறுநிலைகளில் கல்விக் கூடங்கள்வளர்ச்சிப் பெற்றுள்ளன. இந்த சூழலில்அரசின் அனைத்து வகையானஉதவிகளையும் பெற்று இயங்கிக்கொண்டிருக்கும் பல்வேறு அரசு உதவிப்பெறும் பள்ளிகள், சுய நிதி பள்ளிகளைப்போல் கட்டணம் வசூலித்துக் கொண்டும்,அரசின் விதிமுறைகளை மீறியும்செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.நுழைவுவாயிலில் உள்ள பெயர்பலகையில் தனிநபர் பெயருடன் அரசுஉதவி பெறும் பள்ளி என்ற வார்த்தையும்இடம் பெற்று வந்தது. ஆனால்,காலப்போக்கில் அரசு உதவி பெறும்என்ற வார்த்தையை பயன்படுத்துவதைகௌரவக் குறைச்சலாக கருதிபெரும்பாலான நிர்வாகிகள் தவிர்த்துவிட்டனர்.

இதனால், மக்கள்வரிப்பணத்தில் செயல்பட்டு வரும் இந்தபள்ளிகள் சுயநிதிப் பள்ளிகளாகசித்தரிக்கப்பட்டு, மாணவர்களிடம்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.அதேபோல் அரசு ஊதியத்தில்நியமிக்கப்படும் ஆசிரியர்களையும்சுயநிதிபிரிவுகளில் பயன்படுத்திக்கொள்கின்றனர்.இதுபோன்ற மாறுதல்கள் காலத்தின்கட்டாயம் என்பதை உணர்ந்து, தமிழகஅரசு உரிய உத்தரவுகளை பிறப்பிக்கவேண்டும் என்றார்.

9 comments

 1. அனைத்து வகை பள்ளிகளையும் பள்ளிக் கல்வித்தறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரலாமே....

  ReplyDelete
  Replies
  1. Any body know the working teacher sutitn in aided school s...

   Delete
 2. Ellarukkum tetla pass pannanumnu arivipu. Veliidunga

  ReplyDelete
 3. tet not needed minority
  enna justice

  ReplyDelete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. தகுதித்தேர்வு இல்லாமல் அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் யாரேனும் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளார்களா?தயவு செய்து தெரிவிக்கவும்.

  ReplyDelete
 8. தகுதித்தேர்வு இல்லாமல் அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் யாரேனும் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளார்களா?தயவு செய்து தெரிவிக்கவும்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives