Flash News: அரசு ஊழியர்கள் ஒரு மணிநேரத்தில் காத்திருப்பு போராட்டத்தை கைவிட வேண்டும்: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 15, 2017

Flash News: அரசு ஊழியர்கள் ஒரு மணிநேரத்தில் காத்திருப்பு போராட்டத்தை கைவிட வேண்டும்: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போரட்டத்தை உடனே கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் ஏன் போராட்டத்தை தொடர்கறீர்கள் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் ஏன் கேலிக்கூத்து ஆக்குகிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜரான 3 ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்ற பிறகே அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தடையை மீறியும், உத்தரவுகளை மீறியும் அரசு ஊழியர்கள் ஏன் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறீர்கள் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கடுமையான கண்டனங்களை தெரிவித்திருக்கின்றனர். மேலும் போரட்டத்தை உடனே கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். நீதிமன்றத்தை நாடாமல் போராட்டத்தில் ஈடுபட்டது ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதனையடுத்து அரசு ஊழியர்கள் ஒரு மணிநேரத்தில் காத்திருப்பு போராட்டத்தை கைவிட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. போராட்டத்தை கைவிடாவிட்டால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அப்புறப்படுத்தப்படுவார்கள். நிபந்தனையின்றி வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்றத்தில் ஆஜரான ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளிடம் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி