ரூ.750 தனி ஊதியம் குறித்த விளக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 25, 2017

ரூ.750 தனி ஊதியம் குறித்த விளக்கம்

ரூ. 750 தனி ஊதியம் குறித்து தமிழ்நாடு அரசு நிதித்துறை(சிஎம்பிசி) கடித எண் 8764 சிஎம்பிசி 2012-1 நாள் 18.04.12 ல் பக்கம் 2 ல் பத்தி 2(ஆ) ல் கொடுக்கப்பட்டுள்ள விளக்கம்

ஆ) மேற்குறிப்பிட்டுள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு அனுமதிக்கப்படும்தனி ஊதியம் ரூ.750 ஆண்டு உயர்வுக்கும் அகவிலைப்படிக்கும் ஓய்வூதியத்திற்கும்கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இவ்வகை ஆசிரியர் பணியிடங்களில்இருந்து பதவி உயர்வு பெற்றுசெல்லும் ஆசிரியர்களுக்கு உயர்பதவியில் ஊதியம் நிர்ணயம் செய்யும் போதுஇத்தனி ஊதியம் அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அதன் பின்னர்உயர்பதவியில் இத்தனி ஊதியம் அனுமதிக்கப்படக் கூடாது. என விளக்கம்கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் சந்தேகம் என்னவென்றால் பதவி உயர்வுக்கான ஊதியநிர்ணயத்தின் போது 3 சதவீதத்திற்கு மட்டுமே தனி ஊதியம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
21.11.11 ல் இடைநிலை ஆசிரியர் பதவியில் பெற்ற ஊதியம்
Pay 14030 + 2800 GP + 750 PP = Total = 17580
பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு நாள் 22.11.2011
பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு அனுமதிக்கப்படும் ஊதிய உயர்வுத் தொகை
Pay 3 % 530 + 1800GP = 2330
22.11.2011 ல் பட்டதாரி ஆசிரியர் பதவியில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம்
Pay 15310 + 4600 GP = 19910
இதில் என்ன சந்தேகம் என்றால்
15310 என்பது 14030 + 530 + 750 என்பதன் கூட்டுத் தொகை.
இந்த 750 இதனுடன் சேருமா?
அப்படி சேர்க்கும் பட்சத்தில் கிரேடு ஊதியம் 4600 + 750 மொத்தம் 5350 என்றுஆகாதா?
ஒரு பதவி உயர்வின் போது 3 சதவீதம் ஊதிய உயர்வு என்பது மட்டும் அல்லாமல் 750ம் ஊதிய உயர்வாக கணக்கிடப்படாதா? அப்பொழுது ஒரு பதவி உயர்வின் போது 750 + 530 என 1280 ஊதிய உயர்வாகக் கிடைக்குமா?
[7/9, 11:36 PM] SURESH: I am browsing [TRB TNPSC: 750 PP Case Regarding Documents]. Have a look at it! http://www.trbtnpsc.com/2016/01/750-pp-case-regarding-documents.html?m=1
[7/9, 11:55 PM] SURESH: ஆறாவது ஊதியக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தியதில் இருந்தே இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியப் பிரச்சினை தொடங்கி அது ஒரு நபர் குழுவில் தீர்க்கப்படும் என எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் மத்திய அரசு வழங்கும் ஊதியமான 9300-34800 + 4200 என்ற ஊதியத்தை வழங்க இயலாமைக்குப் பல்வேறு நொண்டிச் சாக்குகளைக் கூறிய கடந்த கால அரசு, அதற்குப் பதிலாக ரூ 750 ஐ தனி ஊதியமாக 01.01.2011 முதல் வழங்கியது.


இதனால், 01.01.2006 முதல் 31.12.2010 வரை இடைநிலை ஆசிரியர் பணியிலிருந்து பட்டதாரியாசிரியர் பதவி உயர்வு பெற்றுச் சென்ற ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் ரூ 750 தனி ஊதியத்தை இழந்தது மட்டுமல்லாமல் தமக்குப் பின்னால் அதாவது 01.01.2011க்குப் பிறகு பதவி உயர்வு பெற்றுச் சென்றவர்களைக் காட்டிலும் குறைவான ஊதியத்தைப் பெறும் நிலைக்கு ஆளாயினர். பல்வேறு சங்கவாதிகள் இப்பிரச்சினை சார்ந்த விரிவான கருத்துருக்களை மூன்று நபர் குழுவுக்கு வழங்கப்பட்டு தனி ஊதியத்தை 01.01.2006 முதல் கருத்தியலாகவாவது வழங்கப்பட்டால்தான் ஊதிய முரண்பாடுகள் தீரும் எனத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.

நீண்ட காலமாக மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற தொடக்கப் பள்ளி முதல் முதுகலை ஆசிரியர் அமைப்புகளைச் சேர்ந்த பல்வேறு சங்கங்களால் பல்வேறு கோரிக்கைகள் எழுப்பப்பட்டும், போராட்டங்கள் நிகழ்த்தப்பட்டும் அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. ஆனால் மூன்று நபர் குழுவின் அறிக்கையில் இப்பிரச்சினை சார்ந்த ஒரு அம்சம் கூட இல்லாதது மிகுந்த வேதனையை அளிக்கிறது.

அதே சமயம் ஆசிரியர் அல்லாத பிற துறைகளுக்கு ஏராளமான திருத்தங்களை வாரி வழங்கியிருக்கிறது. இவ்வாறிருக்கையில், ரூ 750 தனி ஊதியத்தை 01.01.2011 முதல் வழங்கியதை எவ்வித மாற்றமும் செய்யாத மூவர் குழு, தற்போது உதவியாளர்களுக்கு மட்டும் தனி ஊதியத்தை 01.01.2006 முதல் கருத்தியலாகவும் 01.04.2013 முதல் பணப்பயன் பெறும் வகையிலும் வழங்கியிருக்கிறதே! இது மட்டும் எப்படி சாத்தியமாயிற்று? தனக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயமா? ஒரு கண்ணுக்கு வெண்ணையயும், மற்றொரு கண்ணுக்கு சுண்ணாம்பையும் ஏன் வைக்க வேண்டும்? 01.01.2006 முதல் கருத்தியலக்கத்தானே வழங்கக் கோருகிறோம்? அது அரசுக்கென்ன பெரும் நிதிச்சுமையையா ஏற்படுத்தப்; போகிறது? மாற்றாக பல்வேறு ஊதிய முரண்பாட்டைத்தானே களையப்போகிறது! ஆகவே மூன்று நபர் குழுவின் செயல்பாடுகள் ஆசிரியர்களை குறிப்பாக இடைநிலை ஆசிரியர்களை அவமானப்படுத்துவதாகவே அமைந்துள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி