சித்தா படிப்புக்கு நாளை கவுன்சிலிங் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 10, 2017

சித்தா படிப்புக்கு நாளை கவுன்சிலிங்

சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், நாளை துவங்குகிறது. தமிழகத்தில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய முறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி படிப்புகளுக்கு, ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன.
இவற்றில், 396 இடங்கள்; 22 சுயநிதி கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டிற்கு, 600 இடங்கள் உள்ளன.இந்த இடங்களில் சேர, 6,938 பேர் விண்ணப்பித்து உள்ளனர். தரவரிசை பட்டியல்,www.tnhealth.orgஎன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கவுன்சிலிங், சென்னை, அரும்பாக்கம், சித்த மருத்துவக் கல்லுாரி வளாகத்தில், நாளை துவங்குகிறது; 14 வரை, கவுன்சிலிங் நடைபெறும்.முதல் நாளில், சிறப்பு பிரிவினர் மற்றும் தரவரிசை பட்டியலில், 201 வரை இடம் பெற்றவர்கள் பங்கேற்க உள்ளனர்.

அழைப்பு கடிதத்தை, இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி