தொடர்ந்து முயன்றும் கட்டுப்படுத்த முடியவில்லை: பரவி வருவது டெங்குவா அல்லது வேறு கிருமிகள் கலந்த காய்ச்சலா? - மருத்துவ அலுவலர்கள் சங்கம் சந்தேகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 18, 2017

தொடர்ந்து முயன்றும் கட்டுப்படுத்த முடியவில்லை: பரவி வருவது டெங்குவா அல்லது வேறு கிருமிகள் கலந்த காய்ச்சலா? - மருத்துவ அலுவலர்கள் சங்கம் சந்தேகம்

தமிழகத்தில் பரவி வரும் காய்ச்சலை எவ்வளவு முயன்றும் கட்டுப்படுத்த முடியவில்லை. பரவுவது டெங்கு காய்ச்சலா அல்லது வேறு கிருமிகள் கலந்த காய்ச்சலா என தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் கதிர்வேல் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழகம் முழுவதும் டெங்கு தடுப்பு பணிகளில்பொது சுகாதாரத்துறையின் கீழ் மருத்துவ அலுவலர்கள் பணிபுரிகின்றனர். அந்தந்த மாவட்டங்களில் ஆட்சியர்கள் மற்றும் சுகாதார அலுவலர்கள் போடும் கட்டுப்பாட்டு திட்டங்களால் மருத்துவ அலுவலர்கள் குழப்பமடைந்துள்ளனர். ஒரேநேரத்தில் காய்ச்சல் முகாம், பள்ளிக்கூட முகாம் மற்றும் வழக்கமாக மேற்கொள்ளப்படும் கிராமப்புற முகாம்களை நடத்த வலியுறுத்துகிறார்கள்.

இந்த அவசர காலத்தில்இதுபோன்ற குழப்பங்களை தவிர்த்து பணிகளை வரையறுக்க வேண்டும்.அதிக அளவில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கஇருப்பதால் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவ நிலையங்களில் 5-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் இருந்தால் மட்டுமே 24 மணி நேரமும் சிறந்த சேவை வழங்க முடியும்.டெங்கு தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டங்கள் நள்ளிரவு வரைகூட சில மாவட்டங்களில் நடைபெறுகிறது. மறுநாள் காலையில் எழுந்து பணி செய்ய வேண்டியிருக்கிறது. மன அழுத்தத்தோடு பணி செய்வதால், நோயாளிகளை சரியாக கவனிக்க முடியவில்லை. அலுவலக நேரங்களில் மட்டும் டெங்கு தொடர்பான மாவட்டமற்றும் வட்டார அளவிலான ஆய்வு கூட்டங்களை நடத்த வேண்டும்.

தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து பொதுமக்களிடம் டெங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தற்போதுஅதிக அளவில் காய்ச்சல் பரவி வருகிறது. சில இடங்களில் தொடர்ந்து உயிரிழப்பு ஏற்படுகிறது. முயற்சி எடுத்தும் காய்ச்சல் பரவுவதை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.இது டெங்கு காய்ச்சல்தானா அல்லது வேறு கிருமிகள் கலந்த காய்ச்சலா என்பதை கண்டறிய வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி