உதவித்தொகை பெற வருமான வரம்பு நிர்ணயம்: முதல்வருக்கு மாற்றுத்திறனாளிகள் கூட்டு இயக்கம் கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 27, 2017

உதவித்தொகை பெற வருமான வரம்பு நிர்ணயம்: முதல்வருக்கு மாற்றுத்திறனாளிகள் கூட்டு இயக்கம் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள் கூட்டு இயக்க நடவடிக்கைக் குழு, தமிழக முதல்வருக்கு நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மாற்றுத்திறனாளிகளுக்கு 40 சதவீதம் குறைபாடு இருந்தாலே, வேறு நிபந்தனைகள் ஏதுமின்றி உதவித்தொகை வழங்க வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் 22.02.2016 தேதியிட்ட அரசாணை வெளியிடப்பட்டது.


இந்த அரசாணையை அமல்படுத்தாமல், பழைய விதிமுறைகளையே மீண்டும் அதிகாரிகள் கடைபிடித்தனர். அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பலகட்ட பேச்சுவார்த்தைகளில் முடிவு கிடைக்காததால் கடந்த ஆகஸ்டில் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டோம்.அன்றைய தினம் தலைமைச் செயலகத்தில் சமூகநலத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் கீழ் உள்ளவர்களுக்கு உதவித்தொகை கொடுக்க முதல்வரின் ஒப்புதலைப் பெற்று 2 மாதத்துக்குள் நடைமுறைப்படுத்துவோம் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.

சமூக நலத்துறை அமைச்சர் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில், தற்போது மீண்டும் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டபோது, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் என்பதை இலக்காக நிர்ணயிக்க சமூக நலத்துறை சார்பில் அரசுக்கு பரிந்துரைக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தகவல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், அதனை ஏற்க முடியாது.மாற்றுத்திறனாளிகளை வஞ்சிக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு அதிகாரிகள் மேற்கொண்டால் போராடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. எனவே, மாற்றுத்திறனாளிகளின் நியாயமான நீண்ட கால கோரிக்கைகளை தீர்க்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி