முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் டெங்கு காய்ச்சலை ஏன் சேர்க்கவில்லை?- தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 6, 2017

முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் டெங்கு காய்ச்சலை ஏன் சேர்க்கவில்லை?- தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை தனியார் மருத்துவமனைக்கு டெங்கு சிகிச்சைக்கு செல்பவர்கள், முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் டெங்கு காய்ச்சல் ஏற்றுக்கொள்ளப்படாததால்,  சிரமத்திற்குள்ளாகின்றனர். முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கான சிகிச்சை ஏன் சேர்க்கப்படவில்லை என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பருவமழைக்கு முன்பாக நீர் நிலைகளை தூர்வாரிவெள்ள பாதிப்பை தடுப்பதற்கான உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், தேங்கி கிடக்கும் குப்பைகளை முறையாக அகற்றிதொற்று நோய் வரமால் தடுக்க உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் ஏ.பி.சூரிய பிரகாசம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கில் கூடுதலாக மனு ஒன்றையும் அவர்தாக்கல் செய்தார். அந்த மனுவில் டெங்கு காய்ச்சலால் தமிழகம் முழுவதும் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த காய்ச்சலுக்கு சிகிச்சை பெற அரசு மருத்துவமனைகளுக்கு சென்றால் அதிக அளவில் கூட்ட நெரிசல் உள்ளது.

இதனால் பலருக்கு உரிய சிகிச்சை கிடைக்காமல்போகிறது, மேலும் டெங்கு காய்ச்சலுக்காக தனியார் மருத்துவமனைக்கு சென்றால் அங்கு முதல்வரின் விரிவான இலவச காப்பீட்டு திட்டத்தின் கீழ் டெங்கு காய்ச்சல் சேர்க்கப்படாததால் இலவச சிகிச்சை இல்லை என தெரிவிக்கின்றனர்.எனவே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

இந்தமனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதிஎம். சுந்தர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள், முதல்வரின் விரிவான இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ்'டெங்கு' ஏன் சேர்க்கப்படவில்லை ? என கேள்வி எழுப்பினார். மேலும் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது ? என்பது குறித்தும் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி