Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

மாணவர்கள் ஆதார் எண்ணை டிச.31-க்குள் இணைக்க உத்தரவு

தொடக்க பள்ளிகளில் மாணவர்களின் 'எமிஸ்' எண்ணோடு, ஆதார் எண்ணை டிச.31-க்குள் 100 சதவீதம் இணைத்து அனுப்ப கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை போலியாக காண்பித்தல், நலத்திட்ட உதவிகளில் முறைகேட்டில் ஈடுபடுதல் உள்ளிட்டவையை களைய 'எமிஸ்' என்ற கல்வி மேலாண்மை தகவல் தொகுப்பு உருவாக்கப்பட்டது.மாணவர்களுக்கு தனி இலக்க அடையாள எண் வழங்கப்பட்டு, அவர்களது பெயர், ரத்த வகை, பெற்றோர் பெயர், வருமானம், முகவரி, புகைப்படம், அலைபேசி எண் உள்ளிட்ட விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. 'எமிஸ்' எண்ணோடு மாணவர்களின் ஆதார் எண்ணையும் இணைக்கும் பணியில் தலைமை ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 'எமிஸ்' எண்ணோடு இதுவரை ஆதார் எண் பதியாத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் டிச.31-க்குள் ஆதார் எண்ணை பதிவு செய்து 100 சதவீத பணியை நிறைவு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: 'எமிஸ்' எண்ணோடு ஆதாரைஇணைப்பதன் மூலம் மாணவர்களின் எண்ணிக்கை துல்லியமாக கணக்கிடப்படும். 'எமிஸ்' அடிப்படையில் வருகின்ற கல்வி ஆண்டில் பள்ளி கல்வி துறை சார்பில் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.

இதற்கான பிரத்யேக அலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களின் விபரங்களை எங்கிருந்தும் கண்காணிக்கலாம். வேறு பள்ளிக்கு மாணவர் மாற்றம் கேட்டால், 'எமிஸ்' இணையதளத்தில் மாணவரை மாற்றம் செய்தால் மட்டுமே, புதிய பள்ளியில் சேர்க்க முடியும், என்றார்.

1 comment

 1. உச்ச நீதி மன்றமே, உயர் நீதிமன்றமோ,
  எந்த நீதித்துறையும் மக்களுக்கு ஆனது என்றால் ,
  எவ்வளவு ஏற்றத்தாழ்வு , சாதி மத வேறுபாடு , பொருளாதார ஏற்றத்தாழ்வு இருந்தும் மக்கள் என்றால் ஜனநாயக நாட்டில் அனைவரும் சமம் என்பது உண்மையெனில்,
  முதல் குடிமகனாகிய, குடியரசுத் தலைவர்,
  பிரதம மந்திரி , அனைத்து அமைச்சர்கள், M.P's , அனைத்து மத்திய அரசுத் துறைகளின் ஊழியர்களான I. A. S, IPS முதல் கடைநிலை ஊழியரான cleark வரை உள்ளவர்களும் , அதே நேரத்தில் அனைத்து மாநிலங்களில் உள்ள முதலமைச்சர், ஆளுநர் முதல் அமைச்சர்கள், M. L.A's , அனைத்து மாநில ஊழியர்களான மாநகராட்சியிலிருந்து அனைத்து மாநிலத் துறை கடைநிலை ஊழியர்கள் வரை உள்ள மக்கள் வரிபணத்தை பெற்று ஊழியம் செய்யும் அனைவரும் முன் உதாரணமாக ,
  தங்கள் PAN Card, phone No, மற்றும் நீங்கள் கூறுகின்ற வங்கி கணக்கு போன்ற அனைத்தையும் ஆதாருடன் இணைத்து ஒரு எடுத்துக்காட்டாக இன்நாட்டு மக்களுக்கு திகழ வேண்டும்.
  பின்பு
  சத்துணவுக்கு, இலவசத்திற்கு நிற்கும் சாமானிய மக்கள் ஆதாருடன் இணைக்க வேண்டியதை இணை் க்க வேண்டும் என்று உத்தரவு போட்டால் அவர்களுக்கும் புரியும் அரசு செயல் திட்டமும் சென்று சேர வேண்டியவர்களைச்சேர்கின்றது என்று பயமில்லாமல் நலத்திட்டத்தை அறிவிக்கலாம். செயல்படுத்தலாம்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives