புதிய திட்டங்களுடன் வோடஃபோன்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 3, 2017

புதிய திட்டங்களுடன் வோடஃபோன்!

ரிலையன்ஸ் ஜியோவுடனானபோட்டியை வலுப்படுத்தும் வகையில், தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு 79 ரூபாய் முதல் 509 ரூபாய் வரையிலான ஐந்து புதிய திட்டங்களை வோடஃபோன் நிறுவனம்அறிவித்துள்ளது.
இதுகுறித்து வோடஃபோன் இந்தியா நிறுவனத்தின் தமிழ்நாடு வட்டாரத் தலைவர் முரளி கூறுகையில், “வாடிக்கையாளர்களின் தேவையைப் பொறுத்தே எங்களது நிறுவனம் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் அனைத்து வகையான வாடிக்கையாளர்களும் பயனடையும் வகையில் தற்போது புதிதாக சில திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.ரூ.79 திட்டத்தில், 79 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் வாடிக்கையாளர்கள் ஏழு நாள்களுக்கு 500 எம்.பி அளவிலான டேட்டாவை இலவசமாகப் பெறலாம். இச்சலுகை 2ஜி/3ஜி/4ஜி மொபைல்போன்கள் பயன்படுத்தும் அனைவருக்கும் பொருந்தும் என்று வோடஃபோன் கூறியுள்ளது. இச்சலுகையில் வரம்பற்ற லோக்கல் மற்றும் எஸ்டிடி அழைப்பு வசதி, குறுஞ்செய்திசேவைகளுக்கு ரூ.25 பைசா என்றும் அறிவித்துள்ளது.ரூ.199 திட்டத்தில் 2ஜி/3ஜி/4ஜி வாடிக்கையாளர்கள்28 நாள்களுக்கு 1 ஜி.பி. அளவிலான டேட்டாவை இலவசமாகப் பெறலாம். ரூ.347 திட்டத்தில் 2ஜி/3ஜி/4ஜி வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு 1.5 ஜி.பி. அளவிலான டேட்டா என, 28 நாள்களுக்கு இலவசமாகப் பெறலாம்.

ரூ.459 திட்டத்தில் 2ஜி/3ஜி/4ஜி வாடிக்கையாளர்கள் நாள் ஒன்றுக்கு 1 ஜி.பி. அளவிலான டேட்டா என 70 நாள்களுக்கு இலவசமாகப் பெறலாம். ரூ.509 திட்டத்தில் வாடிக்கையாளர்கள் நாள் ஒன்றுக்கு 1 ஜி.பி. அளவிலான டேட்டா என 84 நாள்களுக்கு இலவசமாகப் பெறலாம். மேற்கூறிய சலுகையில் வரம்பற்ற லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங்அழைப்பு வசதிகளும், இலவசமாகத் தினமும் 100 குறுஞ்செய்திகள் அனுப்பும் வசதியும் உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி