Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ஒரு கிளாஸ் டீ குடிப்பதில் இவ்வளவு நன்மைகளா? தெரிந்து கொள்ளுங்கள் இன்று சர்வதேச ‘டீ தினம்’!


மழைச் சாரலில் சிலிர்த்தபடியே ரோட்டோரத்து கடைகளில் இருக்கும் கண்ணாடி குவளையில் டீ பருகியவாரே பெய்யும் மழையில் தொலைந்து போகும் ரசிகரா நீங்கள்?
அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கானது. ரசனையுடன் நீங்கள் குடிக்கும் இந்த தேநீரில் உள்ள பயன்களையும் அதை பற்றிய சுவாரசிய தகவல்களையும் அறிவீர்களா?

என்னதான் இப்போதெல்லாம் குறைவாக மழை பெய்தாலும், வேலைக் கெடுபிடிகளுக்கு மத்தியில், ஏற்கனவே குளிர் சாதன அறையில் பாதி உறைந்த நிலையில் இருக்கும் பலரது மனதில் எழும் எண்ணம், ‘இப்போ சுடச்சுட ஒரு நல்ல டீ சாப்பிட வேண்டும்’ என்பதே.

தேயிலையில் இருக்கும் பாலிபினால் என்ற கலவை சுற்றுச்சூழல் மாசுபாட்டால் வரக்கூடிய புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் மிக்கது. முச்சுமுட்டும் வாகன புகைகளுக்கு மத்தியில் தினமும் பயணிப்பவர்களுக்கு அன்றாடம் டீ குடிக்கும் பழக்கம் இருப்பதும் ஒரு வகையில் நல்லதுதான்.உணவு முறைகளின் மாற்றம், மன அழுத்தம், பணிச்சுமை, இரவில் தூக்கமின்மை போன்ற பிரச்னைகள் மட்டுமில்லாமல் இயல்பாகவே வயது காரணமாக ஏற்படக்கூடிய சுருக்கம், நினைவாற்றல் குறைப்பாடு ஆகியவற்றில் இருந்தும் நம் உடலையும், மூளையையும் இந்த டீ குடிக்கும் பழக்கம் பாதுகாக்கும்.

தேயிலைகள் பல வகைப்படும், ஒவ்வொன்றும் ஒவ்வொறு வகையில் சுவையான தேநீரை நமக்கு தருகிறது. உதாரனத்திற்கு;

மசாலா டீ
கிரீன் டீ
பிளாக் டீ

மசாலா டீ:என்னதான் தேநீரின் பிறப்பிடம் சீனா என்றாலும், இந்தியாவின் பாரம்பரிய தேநீர் வகைக்கு என தனி சிறப்புண்டு. மசாலா டீ அதாவது ‘சாய்’ என்று பரவலாக அழைக்கப்படும் இதில் தேயிலையுடன் ஏலக்காய், இலவங்கபட்டை, கிராம்பு, இஞ்சி போன்றவற்றை சேர்த்து பருகுகிறோம். இது நம் நாட்டின் இயற்கை சூழலுக்கு ஏற்ற ஒரு பானமாகும். இதில் சேர்க்கப்படும் ஒவ்வொரு மசாலா பொருட்களுக்குமே தனித்துவமான மருத்துவ குணங்கள் உண்டு என்பது பலரும் அறிந்ததே. இது உடல் வீக்கம், தொண்டை பிரச்னை, சளி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது என ஒரு சர்வ நோய் நிவாரணியாக செயல்படுகிறது.

கிரீன் டீ:

இந்த பெயர் பல டீ விரும்பிகளுக்கு பிடிக்காத ஒன்றுதான் என்றாலும் இதில் நிறைந்துள்ள பயன்கள் ஏராளம். ‘உடல் எடையை குறைக்க வேண்டுமா? இளமையாகவே இருக்க வேண்டுமா? கிரீன் டீ குடியுங்கள், இதுதான் என் அழகின் ரகசியம்’ என்று பல முன்னனி நடிகைகள் அடிக்கடி விளம்பரங்களில் வந்து இவ்வாறு சொல்வதை நாம் பார்த்திருப்போம். உண்மையில் அதுதான் அவர்களுடைய அழகின் ரகசியமா என்று தெரியாது ஆனால், கிரீன் டீ நிஜமாகவே உடல் எடையை குறைப்பதோடு, மூளையின் செயல்பாட்டை துரிதப்படுத்துவது, வாய் புண்ணை சரி செய்வது போன்ற பல நன்மைகளை வழங்கவல்லது.

பிளாக் டீ:தலைவலிக்குது நல்லா ஸ்ட்ராங்கா ஒரு டீ குடிச்சாதான் சரியாகும்னு அடிக்கடி ஃபீல் பன்னுபவரா நீங்கள்? அப்போ சரிதாங்க, உண்மையில் ஒற்றை தலைவலி, தலைச்சுற்றல் போன்ற பிரச்னைகளுக்கு அதிக திடமான பிளாக் டீ ஒரு நல்ல மருந்து. அது மட்டுமின்றி சிறுநீரக கோளாறு, குறைந்த ரத்த அழுத்தம், மன அழுத்தம், இதய பாதுகாப்பு என இன்னும் பல நன்மைகளையும் தரக்கூடியது.

டீ பருகாதவர்களை விட டீ குடிப்பவர்களின் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. குறைந்தது 3% வரை உங்கள் உடலின் கலோரியை டீ குறைக்க வல்லது. அதாவது தினமும் 60-70 கலோரிகளை குறைப்பதன் மூலம் எந்த ஒரு உடற்பயிற்சியும் இல்லாமல் 3.5 கிலோ வரை உடல் எடையை உங்களால் இழக்க முடியும்.

தேநீரில் உள்ள ஆண்டிஆக்சிடண்ட்ஸ் பேக்டீரியா போன்ற நுண்கிருமிகளால் பற்களின் மேற்பரப்பில் உருவாகும் படலம் போன்றவற்றிலிருந்து பற்களை பாதுகாக்கும். இன்னும் சொல்லப்போனால் தேநீரில் சர்க்கரை இல்லாமல் குடிப்பது வெண்மையான பற்களையும் தரும். எனவே வெள்ளை பற்களுடன் கூடிய அழகிய சிரிப்புக்கு தேநீரில் சர்க்கரை சேர்ப்பதை தவிருங்கள்.காபியைவிட தேயிலைகளில் இருந்து தயாரிக்கப்படும் தேநீரில் 50% குறைவான கஃபைன் அளவே உள்ளது. அதனால் தேநீரில் கெடுதலே இல்லையா என்று கேட்காதீர்கள், ‘அளவுக்கு மீறினல் அமிழ்தமும் நஞ்சு’ எனவே உடலின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற அளவு டீ குடிப்பதில் எந்தவொரு அபாயமும் இல்லை. அடுத்து வரவிருக்கும் மழை காலத்தில் உங்களை உற்சகப்படுத்துவதோடு உடலிற்கும் பல நன்மைகளும் தரும் என்கிற நம்பிக்கையோடு தேநீரை சுடச்சுட பருகி மகிழுங்கள். 

1 comment

  1. HAPPY TEA DAY HAPPY X' MAS AND HAPPY NEW YEAR TO ALL THANK YOU

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives