எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு பணிகளை கண்காணிக்க 32 சிறப்பு அதிகாரிகள் நியமனம்: பள்ளி கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ் உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 20, 2018

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு பணிகளை கண்காணிக்க 32 சிறப்பு அதிகாரிகள் நியமனம்: பள்ளி கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ் உத்தரவு

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுபணிகளை கண்காணிக்க 32 சிறப்பு கண்காணிப்புஅதிகாரிகளை நியமித்து பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதியும், பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 7-ம் தேதியும், எஸ்எஸ்எல்சி தேர்வு மார்ச் 16-ம் தேதியும் தொடங்குகின்றன. 12-ம் வகுப்பு தேர்வை 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ-மாணவிகளும், பிளஸ் 1 தேர்வை 8 லட்சத்து 61 ஆயிரத்து 913 பேரும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 10 லட்சத்து ஆயிரத்து 96 பேரும் எழுதுகிறார்கள்.பொதுத்தேர்வுகளுக்கான இறுதிகட்ட பணிகளில் அரசு தேர்வுத்துறை மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.இந்நிலையில், பொதுத் தேர்வு பணிகளை கண்காணிக்க மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் 32 சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை பள்ளி கல்வித்துறையின் முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ளார். அவர்களில் 7 பேர் இயக்குநர் அந்தஸ்தில் இருப்பவர்கள். மற்ற 25 பேர் இணை இயக்குநர் நிலையில் உள்ளவர்கள்.

இயக்குநர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் வருமாறு:-

1.பள்ளி கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் - சென்னை; 2. மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் எஸ்.கண்ணப்பன் - காஞ்சிபுரம்,3.அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட மாநில இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் - திருவள்ளூர்;4.ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்-செயலர்டி.உமா - திருநெல்வேலி; 5.ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் கே.தங்கமாரி - கன்னியாகுமரி; 6.ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் வீ.ராஜராஜேஸ்வரி - தூத்துக்குடி; 7.தமிழ்நாடு பாடநூல் கழக செயலர் எம்.பழனிச்சாமி - மதுரை.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி