தத்கால் ரயில் டிக்கெட் முன்பதிவில்முறைகேடு: 19 செயலிகளுக்கு இந்திய ரயில்வே தடை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 12, 2018

தத்கால் ரயில் டிக்கெட் முன்பதிவில்முறைகேடு: 19 செயலிகளுக்கு இந்திய ரயில்வே தடை

தட்கால் ரயில் டிக்கெட் முன்பதிவின்போது முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி, நாடுமுழுவதும் 19 செயலிகளுக்கு (ஆப்) இந்திய ரயில்வே தடை விதித்துள்ளது.
அவசரமாக வெளியூர் பயணம் மேற்கொள்பவர்களுக்கு தட்கால் ரயில் டிக்கெட் முறை கைகொடுத்து வருகிறது. இதனால்தட்கால் முறையில் டிக்கெட் வாங்க கடும் போட்டி நிலவும். தட்கால் முன்பதிவு தொடங்கிய அடுத்த சில நிமிடங்களிலேயே டிக்கெட்கள் தீர்ந்துவிடும் என்பதால் ஒவ்வொரு வினாடியும் முக்கியமானதாக இருக்கும். இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு சில தனியார் நிறுவனங்கள் மென்பொருளில் மாற்றம் செய்து முறைகேடுகளில் ஈடுபட்டு வருவது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நாடுமுழுவதும் 19 செயலிகள் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ரயில்வேதுறை தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக ஐஆர்சிடிசி அதிகாரிகள் கூறும்போது, “டெல்லி, மும்பை, நாக்பூர் உள்ளிட்ட இடங்களில் தட்கால் ரயில் டிக்கெட்முன்பதிவில் சில தனியார் இணையதளங்கள், செயலிகள் (ஆப்) மூலம் முறைகேடு செய்தது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து 19 செயலிகளுக்கு தடை விதித்துள்ளது. மேலும் ஐஆர்சிடிசி இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி