Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

பாடத்திட்டத்தை மாற்றுகிறோம் ; பிளஸ் 2 படித்தவுடன் வேலை - செங்கோட்டையன் பேட்டி

தமிழக பாடத்திட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் எனவும், அதன் மூலம் பிளஸ் 2 படித்தவுடனேயே வேலை வாய்ப்பு கிடைக்கும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மற்றும் திருப்பூரில் உள்ள பள்ளிகளில் நடைபெற்ற சில நிகழ்ச்சிகளில் இன்று செங்கோட்டையன் கலந்து கொண்டார். அதன் பின்பு அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தமிழக பாடத்திட்டம் உலக தரத்திற்கு மாற்றி அமைக்கப்படும். மாணவர்களின் சீருடைகளையும் மாற்ற திட்டமிட்டிருக்கிறோம். அதன் பின்பு, தனியார் பள்ளி மாணவர்களும் அரசு பள்ளிகளை தேடி வந்து சேரும் நிலை உருவாகும். அதேபோல், புதியாக உதவி மையம் கொண்டு வரப்பட இருக்கிறது.

உயர்நிலை பள்ளியிலிருந்து மேல்நிலைக்கு செல்லும் போது என்ன பாடத்தை தேர்ந்தெடுத்து படிக்கலாம்?. கல்லூரிக்கு செல்லும் போது எந்த மாதிரியான பாடப்பிரிவுகளை தேர்வுசெய்யலாம் என்பது தொடர்பான தகவல்களை அதில் தெரிந்து கொள்ளலாம். 2018-19 கல்வியாண்டில் 1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும். அடுத்த ஆண்டுக்குள் 8ம் வகுப்புகளுக்கும் என அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும்.அதன் மூலம், பிளஸ் 2 படித்தவுடன் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும்" என அவர் தெரிவித்தார்.

15 comments

 1. TET pass panna udane vela kidaikadha?

  ReplyDelete
  Replies
  1. First velai vaipu aluvagathil 1 kodi perugu velaikodu tet pass velaigodu appuram 12th padithavagwlugu velaikodu vennai. .......

   Delete
 2. Firstly unnai mathunum. Appuram ellam sariagividum.

  ReplyDelete
 3. பக்கோடா விற்க்கும் வேலையா????

  ReplyDelete
 4. School colleag padamaga pakkoda thayaripu murai padamaga nadathal esiyaga eruikkum

  ReplyDelete
 5. First abolish all pass system in lower classes

  ReplyDelete
 6. Don't give full practical marks in schooling.

  Give only to eligible candidates.

  ReplyDelete
 7. Follow strict exam paper evaluation procedures

  ReplyDelete
 8. ஊடக நண்பர்கள் வெறும் செய்திகளை மட்டும் போடாதீர். அமைச்சர் சொல்றத மட்டும் போட நீங்க ஒன்னும் அவர்கள் ஊடகம் அல்ல. பொதுவான நடு நிலை தன்மையுடன் செயல் படுங்கள். உலகதரம்வாய்ந்த கல்வி கல்வினு தம்பட்டம் அடிகிறீங்க அனால் மற்ற மாநிலத்தில் உள்ள அளவு கூட தரமான கல்வியை கொடுக்க வில்லை. ஊடக நண்பர்கள் கேள்வியே கேக்க மாட்டிங்களா? இல்ல கேள்வி கேக்க உங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதா? இல்ல உங்களுக்கு கேள்வி கேக்க தெரியாதா? ஒரு வருடமாக சொன்னதையே சொல்லுமாம் கிளி பிள்ளை (செங்கோட்டையன்) அது மாதிரி கூறி வருகிறார். அதையும் வேறு செய்தி கிடைக்காத மாதிரி நீங்களும் தினம் தினம் தயவு செய்து விளம்பரம் செய்ய வெண்டாம். இனியாவது மக்கள் கேக்க நினைக்கும் கேள்விகளை அமைச்சர்களை பார்த்து கேளுங்கள். அடுத்த முறை கல்வி அமைச்சரை சந்திக்கும் ஊடக நண்பர்கள் கணினி பாடத்தை நடமுறை படுத்த சொல்லுங்கள். ஒரு வருடத்திற்கு மேலாக புதிய பாடதிட்டம் பணிகள் நடைபெற்று வருகின்றன அனால் கணினி பாடம் சேர்க்கப்பட்டுள்ளதா இல்லையா என cm cell,SCERT க்கே தேரியவில்லை. அரசு கொள்கை முடிவுனு ஒரு அல்ப காரணம் சொல்லுவாங்க பாருங்க...,

  ReplyDelete
 9. அவன் அவன் படிக்காமலே டீ கடை கொத்தனார் வேலைன்னு உருப்புடியா பொழப்பு நடத்திட்டு இருக்கான், அதுல மண்ணை அள்ளி போற்றதிங்க,

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives