லோக்சபா தேர்தலுக்கு தயாராகி வீட்டீர்களா?.பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்ட பள்ளி மாணவன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 18, 2018

லோக்சபா தேர்தலுக்கு தயாராகி வீட்டீர்களா?.பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்ட பள்ளி மாணவன்

மாணவர்களின் தேர்வு அச்சத்தை நீக்கி ஊக்குவிக்கும் வகையில் டில்லியில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் பள்ளி மாணவ மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி இதில் கலந்தகொண்டு மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார். மாணவர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.அப்போது, பிளஸ் 1 மாணவர் கிரிஷ் சிங் பிரதமர் மோடியை நோக்கி ஒரு கேள்வி எழுப்பி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ''பள்ளி மாணவனாகிய எனக்கு பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது. அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. அதற்கு நீங்கள் தயாராகி விட்டீர்களா?' என கேள்வி எழுப்பினான்.இதற்கு மோடி பதில் கூறுகையில், '' நான் தாமதமாகவே அரசியலுக்குள் நுழைந்தேன்.

 அரசியல் சூழ்நிலையில் நான் இருந்தாலும் இயல்பாக நான் அரசியல்வாதி கிடையாது. அரசியலில் நான் அந்நியனாகவே உணர்கிறேன்.1.25 கோடி மக்களின் ஆதரவு எனக்கு உள்ளது. எனது ஆற்றலை மக்களுக்கு செலவு செய்ய வேண்டும். உங்களுக்குஆண்டுக்கு ஒருமுறை தான் பொதுத்தேர்வு. எனக்கோ 24 மணிநேரமும் தேர்வு தான்'' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி