அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தொலைதூர கல்வி படிப்பில் பொது பாடத்திட்டம்: தமிழ்நாடு திறந்தநிலைபல்கலை.யில் முக்கிய ஆலோசனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 14, 2018

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தொலைதூர கல்வி படிப்பில் பொது பாடத்திட்டம்: தமிழ்நாடு திறந்தநிலைபல்கலை.யில் முக்கிய ஆலோசனை

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தொலைதூரக்கல்வி படிப்புகளில் பொது பாடத்திட்டம் கொண்டுவருவது குறித்து தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது.
சூழ்நிலை காரணமாக மேற் படிப்பைத் தொடர முடியாதவர்களுக்கும், பணியில் இருந்தவாறே உயர்கல்வியைத் தொடர விரும்புவோருக்கும் தொலைதூரக்கல்வி படிப்புகள் வரப்பிரசாத மாக இருந்து வருகின்றன. தமிழ்நாட்டில் அனைத்து பல்கலைக்கழகங்களுமே தொலைதூரக்கல்வி திட்டத்தின்கீழ் இளங்கலை, முதுகலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்குகின்றன. பாடத்திட்டம் ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் வேறுபடும். இதனால், மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது.இதையடுத்து, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தொலைதூரக்கல்வி படிப்புகளில் பொதுப் பாடத்திட்டத்தை கொண்டுவர உயர்கல்வித்துறை கடந்த ஆண்டு முடிவு செய்தது. இதுதொடர்பான அரசாணை கடந்த ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி பிறப்பிக்கப்பட்டது.இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பொதுப்பாடத்திட்டத்தை கொண்டுவருவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது.

அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம்.பாஸ்கரன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் துணைவேந்தர் பாஸ்கரன் பேசும்போது, "உயர்கல்வி செல்வோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் தொலைதூரக்கல்வி திட்டத்துக்கு பெரும் பங்கு உண்டு. அதேநேரத்தில் தொலைதூரக்கல்வி படிப்புகளின் தரத்தை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

முன்னதாக, பதிவாளர் எஸ்.விஜயன் வரவேற்றார். பல்கலைக்கழக இயக்குநர் (கல்வி) கே.முருகன், பொதுபாடத்திட்டம் கொண்டுவருவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் முக்கிய அம்சங்களை எடுத்துரைத்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி