அரசு மருத்துவ கல்லூரிகளில் 'பாராமெடிக்கல்' படிப்பு துவக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 2, 2018

அரசு மருத்துவ கல்லூரிகளில் 'பாராமெடிக்கல்' படிப்பு துவக்கம்

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், ஆய்வக நுட்பனர் பட்டயப்படிப்பு வகுப்புகளை, சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர், நேற்று துவக்கி வைத்தார்.பின், நிருபர்களிடம் கூறியதாவது:
ஆய்வக நுட்பனர் பட்டயப்படிப்புக்கு, வேலைவாய்ப்பு அதிகமாக உள்ளது. ஒரு மாத காலத்திற்குள், அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில், 1,234 ஆய்வக உதவியாளர் பணியிடம், 353 மருந்தாளுனர் பணியிடம் மற்றும் 450 நர்சுகள் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்தாண்டு, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லுாரிகளில், 38 கோடி ரூபாய் மதிப்பில்,48 பாராமெடிக்கல் பாடப்பிரிவுகள் துவங்கப்பட உள்ளன.

தமிழகத்தில் முதன்முறையாக, 13 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில், எட்டு கோடி ரூபாய் மதிப்பில், பட்டமேற்படிப்பு துவங்கப்பட உள்ளது. 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்க, மத்திய அரசு கேட்ட அனைத்து விபரங்களையும், தமிழக அரசு சமர்ப்பித்து விட்டது. தமிழகத்திற்கு, 'எய்ம்ஸ்' அறிவிக்கப்பட்ட ஒன்று. எனவே, இந்த பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி