11, 12-ம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு: ஆசிரியர்களுக்கு அரசு புதிய அனுமதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 19, 2018

11, 12-ம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு: ஆசிரியர்களுக்கு அரசு புதிய அனுமதி

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு பணியை ஆசிரியர்கள் வருவாய் மாவட்டத்துக்குள் விரும்பிய மையத்தில் மேற்கொள்ள அரசு தேர்வுத்துறை அனுமதி அளித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வின் மைய மதிப்பீட்டு பணியில் ஒரு வருவாய் மாவட்டத்துக்குள் அமைக்கப்பட்ட விடைத்தாள்மதிப்பீடு முகாம்களில், ஆசிரியர்கள் தங்களின் கல்வி மாவட்டத்துக்கு அருகில் உள்ள மற்றொரு கல்வி மாவட்டத்தில் உள்ள முகாம்களில் பணிபுரிய விருப்பம் தெரிவித்தால், விரும்பும் மையத்தில் விடைத்தாள் திருத்தும் பணியில் பணியமர்த்தப் படலாம்.அந்த கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்ட முகாமில் விடைத்தாள் திருத்தும் பணி, குறித்த தேதிக்குள் நிறைவடையாத சூழல் ஏற்பட்டால், மதிப்பீட்டு பணி முடிவடைந்த கல்வி மாவட்டத்தில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் பணி முடிவடையாத முகாமுக்குச் சென்று விடைத்தாள் மதிப்பீட்டு பணியை குறித்த தேதிக்குள் முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.ஆசிரியர் அமைப்பு வரவேற்புஇந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பராக அதன் மாநில அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பல்வேறு மாவட்டங்களில் கல்வி மாவட்ட எல்லையில் வேறு கல்வி மாவட்ட மதிப்பீட்டு மையம் செயல்பட்டு வருகிறது. இதனால் ஆசிரியர்கள் மிக அதிக தூரம் பயணம் செய்து மதிப்பீட்டு பணி மேற்கொள்ள வேண்டியிருந்தது.

குறிப்பாக வேலூர் மாநகர எல்லையில் 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன. வேலூர் மாநகரில் உள்ள காட்பாடி பகுதி, திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் தேவையில்லாத பயண நேரம் அலைச்சல் மிச்சப்படும்.

இதை கருத்தில் கொண்டும் இதுபோலவே பல்வேறு மாவட்டங்களில் உள்ள நிலையினை கருத்தில் கொண்டும் இதைத் தவிர்க்கும் வகையில் மதிப்பீட்டு பணியை விரைவாகவும் முடிக்கும் நோக்கோடு அரசுத்தேர்வுகள் இயக்குநரகம் அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி